இந்தியாவின் பிரிவினைக்கு அனுமதி தந்து நாட்டின் புவியியல் அமைப்பை மாற்றியது, நாட்டுக்காக பாடுபட்ட முக்கிய தலைவர்களை புறக்கணித்து, நேருகுடும்பத்தினரின் புகழ்பாடி வரலாற்றை மாற்றியது காங்கிரஸ் தான் என நரேந்திரமோடி குற்றம் சுமத்தியுள்ளார்.
சத்தீஸ்கர் மாநில தேர்தல்பிரசாரத்தின் போது பிரதமர் மன்மோகன்சிங், இந்தியாவின் வரலாறு புவியியலை பா.ஜ.க மாற்றி விட்டதாக குற்றம் சுமத்தியிருந்தார் . இதற்கு பதில் தரும் வகையில் குஜராத் மாநிலம் கேடாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நரேந்திரமோடி,
பிரதமர் மன்மோகன்சிங், ஹிந்துஸ்தான் மண்ணில் பிறந்தார். அது தற்போது நம்மிடம் இல்லை. இந்தியாவின் புவியியல் அமைப்பையே மாற்றியது காங்கிரஸ் தான்-
நம்நாட்டின் புவியியலை மாற்றியது யார்? நாட்டைப்பல துண்டுகளாகப் பிரிக்க யார்காரணம்? இந்தியாவை இரண்டாக பிரித்தது காங்கிரஸ் கட்சிதான். நம்நாட்டுக்கு சொந்தமான பல 100 சதுர கிமீ. பரப்பளவை சீனா ஆக்கிரமித்துள்ளது. இந்தியாவின் இந்த புவியியல்மாற்றத்துக்கு யார்காரணம்? மகாத்மாகாந்தி உப்பு சத்தியாகிரக போராட்டம் நடத்திய சபர்மதி-தண்டி பாதையை மாற்றியமைக்க முடிவுசெய்துள்ளது. 6 மாதங்களுக்கு முன் பிரதமர் அலுவலகத்தில் இருந்து எனக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், இந்த பாதை 30 கிமீ. தூரத்திற்கு மாற்றப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதன்மூலம் காங்கிரஸ்கட்சி மகாத்மா காந்தியைக் கைவிட்டுள்ளது.
சர்தார்படேலுக்கு 41 ஆண்டுகள் கழித்து பாரதரத்னா விருது வழங்கப்பட்டது. சட்டமேதை அம்பேத்கருக்கு நாடு சுதந்திரம்பெற்று 33 ஆண்டுகள் கழித்து இவ்விருது வழங்கப்பட்டது. ஆனால் நேருவுக்கும், இந்திராகாந்திக்கும் அவர்களது வாழ்நாளிலேயே பாரதரத்னா விருது வழங்கப்பட்டது.
லாலாலஜபதி ராய், பாலகங்காதர திலகர், பிபின்சந்திர பால் ஆகியோர் காங்கிரசால் மறக்கடிக்கப்பட்ட தலைவர்கள். நவம்பர் 11ந் தேதி மிகச்சிறந்த கல்வியாளர் அபுல்கலாம் ஆசாத், சுதந்திர போராட்ட வீரர் ஜேபி.கிருபளானி ஆகியோரின் 125வது பிறந்த தினமாகும். இதை காங்கிரஸ் அரசு கொண்டாடவில்லை என்றார்.
இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ... |
இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ... |
அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது. |
Leave a Reply
You must be logged in to post a comment.