காங்கிரஸ் கட்சியை விட விஷத்தன்மை வாய்ந்தகட்சி வேறு எதுவும் இல்லை என்று பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி விமர்சித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நரேந்திர மோடி பேசியதாவது ,
ஆட்சி அதிகாரம் விஷத்திற்குசமமானது என்று ராகுல் காந்தி கூறினார். அப்படியானால் 50 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்த காங்கிரசைவிட அதிக விஷத்தன்மை வாய்ந்தகட்சி உண்டா. பிரச்சாரத்திற்கு வருபவர்கள் ராஜஸ்தான் மாநில மக்களுக்கு என்னசெய்தார்கள் என்பதை சிந்திக்கவேண்டும். அதை விட்டுவிட்டு விஷத்தை பரப்புவதாக கூறுகின்றனர்.
நான் உங்களுக்கு விஷம்கொடுத்தேனா. வசுந்தராராஜே, கட்டாரியா ஆகியோர் உங்களுக்கு விஷம் கொடுத்தனரா. பிரச்சாரத்திற்கு வருபவர்கள் ராஜஸ்தான்மாநில மக்களுக்கு என்ன செய்தார்கள் என்பதை விளக்கவேண்டும். வாக்கு வங்கிகளாக காங்கிரசார் பயன் படுத்தும் பழங்குடியினரை பற்றி ராகுல் காந்தி கவலைப்படவில்லை. ஏழ்மை என்பதற்கு என்னஅர்த்தம் என்பதே ராகுல் காந்திக்கு தெரியாது. ஊடகங்களுக்கு முன்னால்மட்டுமே அவர் ஏழ்மையை பற்றியும் ஏழைகள்குறித்து பேசுவார்.
விலைவாசி உயர்வு மற்றும் பண வீக்கம் போன்ற முக்கியபிரச்சனைகள் பற்றி காங்கிரஸ் வாய்திறக்க மறுக்கிறது. நாட்டின் விடுதலைக்கு நேரு, காந்தி குடும்பத்தினர் மட்டுமே பாடுபட்டார்கள் என்பதை போன்ற தோற்றத்தை சோனியா காந்தி உருவாக்கி வருகிறார் என்றார்.
மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ... |
உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ... |
முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.