டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் ஷீலாதீட்சித் அரசுக்கு எதிராக குற்றப் பத்திரிகையை பாஜக வெளியிட்டது. பாஜக மூத்த தலைவர் எல்கே.அத்வானி, ஷீலாதீட்சித் அரசுக்கு எதிராக குற்றப் பத்திரிகையை வெளியிட்டார். டெல்லி தேர்தல்பொறுப்பாளர் நிதின் கட்காரி, முதல்மந்திரி வேட்பாளர் ஹர்ஷ வர்தன், மாநில தலைவர் விஜய்கோயல் ஆகியோர் இதில் பங்கேற்றனர்.
52பக்கங்கள் கொண்ட அந்தஅறிக்கையில், கடந்த 15 ஆண்டுகள் நடந்த ஷீலாதீட்சித்தின் ஆட்சிபற்றி விளக்கப்பட்டுள்ளது. விலைவாசி உயர்வு, லஞ்சம், ஊழல் மற்றும் மக்கள்விரோத கொள்கைகள் ஆகியவை பற்றி அதில் விளக்கப்பட்டுள்ளது.
விற்பனை வரித்துறை ஊழல், அங்கீகாரமற்ற காலனிகளை ஒழுங்கு முறைப்படுத்தும் ஊழல், காங்கிரஸ் ஆதரவுபெற்றவர்களால் பொதுமக்களின் நிலம் அபகரிப்பு, காமன்வெல்த்போட்டிகளில் நாட்டின் பெருமையை சீர்குலைத்த பலஆயிரம் கோடி ரூபாய் ஊழல், மக்கள் விரோத கொள்கைகள் உள்பட காங்கிரஸ்ஆட்சி காலத்தில் நடந்த பல்வேறு ஊழல்கள் இதில் இடம் பெற்றுள்ளன.
ஷீலா தீட்சித்தின் பொய்யான வாக்குறுதிகள் குறித்தும் , அவரது பிரித்தாளும்சூழ்ச்சி பற்றியும் விவரமான தகவல்களுடன்கூடிய ஆதாரங்கள் இதில் வெளியிடப்பட்டுள்ளதாக பாஜக கூறியுள்ளது.
அதோடு டெல்லியில் சீர்குலைந்துள்ள பொருளாதாரநிலை, வேலையில்லா திண்டாட்டம், சுகாதாரசேவையில் ஏற்பட்டுள்ள மோசமான நிலை, யமுனா ஆற்றில் மாசு, 30 லட்சம்மக்கள் நரகம்போல ஜேஜே.காலனியில் வாழ்வது போன்ற தகவல்களும் இடம்பெற்றுள்ளதாக பாஜக கூறியுள்ளது.
இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ... |
வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.