நடந்து முடிந்த நான்கு மாநில தேர்தல் முடிவுகள் நரேந்திர மோடியை மக்கள் ஏற்று கொண்டிருக்கிறார்கள் என்பதையும் , ராகுலை மக்கள் நிராகரித்திருக்கிரார்கள் என்பதையும் பறைசாற்றுவதாக உள்ளது என்று பாஜக மாநில அமைப்பு பொதுச் செயலாளர் மோகன் ராஜுலு தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது பத்திரிகை செய்தியில் மேலும் தெரிவித்ததாவது; மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சிங்க் சௌகான் தலைமையிலான பாஜக அரசு மூன்றாவது முறையாக மிகப் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது. சத்தீஷ்கரில் டாக்டர் ராமன் சிங் தலைமையிலான பாஜக அரசும், ராஜஸ்தானில் வசுந்தரா ராஜே தலைமையிலான பாஜக அரசும் ஆட்சி அமைக்கிறது , டெல்லியில் பாஜக ஆட்சி அமைக்கும் நிலை உருவாகியுள்ளது. இது மகிழ்ச்சியை தருகிறது அனைவருக்கும் பாராட்டுகள் வாழ்த்துகள்.
இவை அனைத்தும் பாஜக.,வின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது . மேலும் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முதல் மிகப்பெரிய தேர்தல் இது , இதில் பாஜக.,விற்கு அனைத்து இடங்களிலும் பெரும்பான்மை கிடைத்திருப்பது நரேந்திர மோடியின் தலைமைக்கு கிடைத்த மிகப்பெரிய வரவேர்ப்பாகவே பாஜக கருதுகிறது. அதே நேரத்தில் காங்கிரஸ் தனது தளத்தை இழந்திருக்கிறது இவைகள் அனைத்தும் காங்கிரஸை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது மட்டும் அல்ல , ராகுலின் தலைமையை இந்த தேசம் ஏற்றுக்கொள்ள வில்லை என்பதையே காட்டுகிறது என்று பாஜக மாநில அமைப்பு பொதுச் செயலாளர் மோகன் ராஜுலு அவர்கள் தெரிவித்துள்ளார்.
வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது. |
இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ... |
கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.