மோடி அலை வீசவில்லை , மோடி அலை வீசவில்லை என்று தேர்தல் என்னும் கடலில் தத்தளித்து கொண்டிருந்த காங்கிரசும் அதன் அடிபொடிகளும் இன்று மோடி எனும் சுனாமியில் சிக்கி சின்னா பின்னமாகியுள்ளார்கள்.
அண்மையில் டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்றத்துக்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ் வரலாறு காணாத தோல்வியை சந்தித்துள்ளது. அதே நேரத்தில் பாஜக மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது.
230 தொகுதிகளைக் கொண்ட மத்திய பிரதேச சட்டமன்றத்தில் பாஜக 165 தொகுதிகளில் வெற்றி பெற்று. பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்கிறது. காங்கிரசோ அடித்து பிடித்து வெறும் 58 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதில் மாநில முதல்வர் சிவராஜ்சிங் சவுகான்,. 3-வது முறையாக தொடர்ந்து முதல்வராகப் பொறுப்பேற்கிறார்
இதேபோன்று சத்தீஸ்கரிலும் பாஜக முதல்வர் ரமண் சிங் மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கிறார். மொத்தம் உள்ள 90 சட்டமன்ற தொகுதியில் பாஜக 49 இடங்களை பிடித்துள்ளது , காங்கிரஸுக்கு 39 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளது.
ராஜஸ்தானிலோ அசோக் கெலோட் தலைமையிலான ஆளும் காங்கிரஸ் அரசு பாஜக.,விடம் மாபெரும் தோல்வியை தழுவி மண்ணை கவ்வியுள்ளது , மொத்தம் தேர்தல் நடந்த 199 தொகுதிகளில் 21 தொகுதிகளில் மட்டுமே வென்றுள்ளது. வசுந்தரா ராஜே தலைமையிலான பாஜக.,வோ 162 தொகுதிகளை வென்று ஆட்சியமைக்கிறது.
டெல்லியிலோ வெறும் 600 ரூபாய் இருந்தால் போதும் ஒரு குடும்பமே வாழலாம் என்று கூறியபொருளாதார புலி முதல்வர் ஷீலா தீட்சித் தலைமையிலான காங்கிரஸ் கட்சி மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் பத்தை கூட தாண்ட முடியாமல் எட்டு தொகுதிகளில் மட்டுமே வென்று வெலவெலத்துதான் போயுள்ளது. டாக்டர் ஹர்ஷவர்தன் தலைமையிலான பாஜக.,வோ 31 தொகுதிகளில் வென்று ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பினை பெற்றுள்ளது
இந்த 4 மாநிலங்களிலும் மொத்தம் 590 தொகுதிகள் உள்ளன. இதில் 408 தொகுதிகளை பாஜக. கைப்பற்றி புதியசாதனை படைத்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு வெறும் 126 இடங்களே கிடைத்துள்ளன.
சிவராஜ்சிங் சவுகான், ரமண் சிங் போன்ற பாஜக முதல்வர்களின் சிறந்த நிர்வாகமும், அசோக் கெலோட், ஷீலா தீட்சித் போன்ற காங்கிரஸ் முதல்வர்களின் மோசமான நிரவகமும். நரேந்திர மோடி என்ற மிகச்சிறந்த தேசிய தலைமையுமே இந்த மாபெரும் வெற்றிக்கு காரணம் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.
நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்ததால் வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தாங்கள் எளிதாக வெற்றி பெறுவோம். நான்கு மாநில சட்டமன்ற தேர்தலிலும் பாஜக சிறுபான்மையினரால் முற்றிலும் நிராகரிக்கப்பட்டு தோல்வியையே சந்திக்கும் என்று அகில இந்திய அளவிற்கு ஆருடம் சொல்லி வந்த காங்கிரசின் திக் விஜய் சிங்கின் ஆருடம் அவரது சொந்த மாநிலமான மத்திய பிரதேசத்தில் கூட பலிக்கவில்லை. இஸ்லாமியர்கள் பெருவாரியாக வசிக்கும் போபால் மத்யா (Bhopal Madhya), கிழக்கு ஜபல்பூர் (Jabalpur East), பேதுல் (Betul), ஹண்ட்வா (Khandwa), இந்தூர் I (Indore I), இந்தூர் II (Indore II), ஹர்குன்(Khargun), உஜ்ஜைன்(Ujjain) , நறேல (Narela) உள்ளிட்ட பத்து தொகுதிகளை பாஜக கைப்பற்றியுள்ளது.
அதே போன்று இஸ்லாமியர்கலே வெற்றி வாய்ப்பை நிர்ணயிக்கும் ராஜஸ்தானின் அஜ்மீரில் உள்ள நான்கு சட்ட சபை தொகுதிகளையும் பாஜக.,வே கைப்பற்றியுள்ளது. 2008 ம் ஆண்டு 8 சதவிதமாக இருந்த இஸ்லாமியர்களின் ஆதரவு 25 சதவிதமாக மத்திய பிரதேசத்தில் உயர்ந்துள்ளது.
ராஜஸ்தானில் நரேந்திர மோடி பிரசாரம் செய்த 20 தொகுதிகளில் 16 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பிரசாரம் செய்த 7 தொகுதிகளிலும் காங்கிரஸ் தோல்வியையே சந்தித்துள்ளது.
அதேபோன்று சத்தீஸ்கரில் மோடி பிரச்சாரம் செய்த தொகுதிகளே கடைசியில் கடுமையான இழுபரிகளுக்கு மத்தியிலும் ஆட்சி அமைக்கும் வலுவை தந்தது. டெல்லியில் அண்ணா ஹசாரே , அரவிந்த் கெஜ்ரி வால் கூட்டணி கடந்த இரண்டு வருடமாகவே காங்கிரசின் ஊழலுக்கு எதிராக நடத்திய பல்வேறு போராட்டங்களினால் ஏற்ப்பட்ட கெஜ்ரி வால் அலையை மோடி என்ற சுனாமி புரட்டி போட்டதாலேயே காங்கிரசை 8 க்கு நகர்த்தி எந்த சேதமும் இன்றி பாஜக 32 என்று கௌரவமாக கறை கடந்துள்ளது.
மோடி சுனாமி சுழல தொடங்கிவிட்டது இது பாரளுமன்றத்தில் பாஜக என்ற தாமரையை மோடியின் தலைமையில் மலரச் செய்துவிட்டே முற்றுபெறும். மோடி அலையில்லை , மோடி அலையில்லை என்று கூறி திரிந்தவர்கள் எல்லாம் மோடி சுனாமியை கண்டு வாயடைத்து போயுள்ளார்கள் என்பதே உண்மை.
தமிழ்தாமரை VM வெங்கடேஷ்
*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ... |
இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ... |
நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.