காங்கிரசுக்கு ஆட்சிபுரிய வாய்ப்பை அதிகம் தந்து விட்ட நீங்கள், நிறைய அனுபவித்து விட்டீர்கள். எங்களுக்கு, இந்தமுறை வாய்ப்புதாருங்கள்; உங்கள் கனவுகள் அனைத்தையும் நிறைவேற்றுகிறோம், என்று பாஜக., பிரதமர்வேட்பாளர், நரேந்திரமோடி, உத்தரகண்ட் மக்களை கேட்டுக்கொண்டார்.
லோக்சபா தேர்தலுக்கான, பாஜக., பிரசாரகூட்டம், உத்தரகண்ட் மாநிலத்தின் டேராடூன் அருகே நேற்றுநடந்தது.
இதில் கலந்து கொண்டு , பாஜக., பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திரமோடி பேசியதாவது:
லோக்பால் சட்டத்தை ஆதரிப்பது உண்மை எனில் , உத்தரகண்டில் முந்தைய பா.ஜ.க அரசு கொண்டுவந்த லோக் ஆயுக்தசட்டத்தை ஏன் காங்கிரஸ் கட்சி அமல்படுத்தவில்லை காங்கிரஸ் தலைவர் ஒருவர் (ராகுல் காந்தி) தில்லியில் பத்திரிகையாளர் சந்திப்பில் லோக்பால்சட்டம் குறித்துப் பேசினார். அவரிடம் ஒன்று கேட்கிறேன். உண்மையில் உங்களின்மனது, லோக்பால் சட்டத்தை ஆதரிக்குமானால், உத்தரகண்ட் சட்டப் பேரவையில் பா.ஜ.க ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட லோக் ஆயுக்தசட்டத்தை அமல்படுத்த உங்களது கட்சி ஏன் அனுமதியளிக்க வில்லை?
உத்தரகண்ட், ஜார்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களும் ஒரே காலகட்டத்தில் தான் உருவாக்கப்பட்டன. ஆனால், வளர்ச்சியை ஒப்பிடும் போது சத்தீஸ்கரைவிட உத்தரகண்டும், ஜார்கண்டும் பின்தங்கியே உள்ளன. இதற்கு இந்த 2மாநிலங்களில் நிலவும் அரசியல் ஸ்திரத்தன்மையே காரணம். அடிக்கடி ஆட்சியை நீங்கள் மாற்றுகிறீர்கள்.
தலைவர்களை மாற்றுகிறீர்கள். உங்களுக்கு அறிவுரை ஒன்றை தெரிவித்துக்கொள்கிறேன். புதிய அரசுகளுக்கு வாய்ப்பளித்து பரிசோதனைசெய்வதை தற்போது விட்டுவிடுங்கள். பாஜக மீது நம்பிக்கை வையுங்கள்.
உத்தரகண்ட் மாநிலமக்களை காங்கிரஸ் ஏமாற்றிவிட்டது. வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் உத்தரகண்ட் மாநிலத்திற்கு 10 வருட தொழில் துறை திட்டம் அளிக்கப்பட்டது. ஆனால் மத்திய ஐ.மு., கூட்டணி அரசோ, அந்தக்கால அளவை குறைத்துவிட்டது. உத்தரகண்ட் அரசு தன்னிடமுள்ள அதிகாரத்தில், பாதியளவை, யோகாகுரு ராம்தேவுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதிலேயே செலவிடுகிறது. அவருக்கு எதிராக நாள்தோறும் புதிய வழக்கைப் பதிவு செய்கிறது. காங்கிரஸ் அரசின் இந்தநடவடிக்கை ஆச்சரியம் அளிக்கிறது.
இந்தமாநிலத்தில், செழிப்பான ஆறுகள் ஓடுகின்றன. அபரிமிதமான தண்ணீர்வளம் உள்ளது. எனினும், இந்தமாநிலமும், நாடும் மின் பற்றாக் குறையால் இருளில் மூழ்கியுள்ளன. இங்குள்ள நீரை பயன் படுத்தி, நீர்மின்சாரம் எடுக்க, மாநில, காங்கிரஸ் அரசு முயற்சிகள் மேற்கொள்ளவில்லை.அதுபோல், மலைகள், பள்ளத்தாக்குகள் நிறைந்த, இயற்கைவளம் நிறைந்த இந்த மாநிலத்தில், சுற்றுலாவுக்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. சுற்றுலாவைமேம்படுத்த, மாநில அரசு சரியானமுயற்சிகள் மேற்கொள்ளவில்லை.
இந்த மாநில இளைஞர்கள், திறமையானவர்கள். அவர்களை பயன் படுத்தி கொள்ளவும், வேலை வாய்ப்புகளை வழங்கவும், காங்கிரஸ் அரசு தயாராக இல்லை.ஏழைகளை ஏழைகளாகவேவைத்திருக்க இந்த அரசு விரும்புகிறது.இத்தனைகாலம், காங்கிரசுக்கு ஆள, மத்தியில் வாய்ப்புகொடுத்தீர்கள். எங்களுக்கு ஒரு முறை வாய்ப்புதாருங்கள்; உங்கள் கனவுகள் அனைத்தையும் நிறைவேற்றுகிறோம்.மத்தியில் ஆளும், காங்கிரஸ் தலைமையிலான, ஐ.மு., கூட்டணி அரசின் தவறான திட்டங்களால், நிறையபாதிப்பை சந்தித்து விட்டீர்கள். எங்களை நம்புங்கள்; பாஜக..,வுக்கு வாய்ப்புதாருங்கள்.இவ்வாறு, நரேந்திரமோடி, பிரசார கூட்டத்தில் பேசினார்.
மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ... |
முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.