"ஊழலை கூட்டி தள்ளுவேன் "–என "துடைப்பத்தை " எடுத்தார்…அண்ணா ஹஜாரே –ஊழல்— குப்பைகளை கூட்டி தள்ளும் முன்பே— துடைப்பத்தை பிடுங்கிக் கொண்டு ஓடிவிட்டார் ஹஜாரே சிஷ்யர் அரவிந்த் கேஜ்ரிவால்..
துடைப்பத்தை காட்டி –ஊழல் குப்பைகளை கூட்டித் தள்ளுவேன்– என சூளுரைத்து டெல்லி மக்கள் வாக்குக்களை பெற்று, பாஜகவிற்கு அடுத்த படியாக இரண்டாவது இடத்தை பிடித்தார் கேஜ்ரிவால்..
32 இடங்களை பிடித்த பாஜக மேஜாரிடிக்கு 4 இடங்கள் குறைந்ததால், "ஆட்சி அமைக்க போவதில்லை " என சொல்லியத்தால், 28 இடங்களை பெற்ற ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்க அழைக்கப் பட்டது.
10 நாள் அவகாசம் கேட்ட கேஜ்ரிவால், இரண்டு நாளில் முடிவு சொல்வதாக கூறி, ஒரே நாளில் ஆட்சி அமைக்கிறோம் என்று முடிவை வெளியிட்டார்..
நிபந்தனை அற்ற ஆதரவு—நிபந்தனையுடன் கூடிய ஆதரவு–என்று காங்கிரஸ் மாற்றி மாற்றி சொன்னாலும், கடைசியாக "வெளியிலிருந்து" ஆதரவு தந்ததாள், கேஜ்ரிவால் வரும் 28 ந்தேதி டெல்லி முதல்வராக முடிசூடப்போகிறார்..
"காங்கிரஸ் என்னும் ஊழல் குப்பையை அகற்றுவோம் "–என்று சூளுரைத்த ஆம் ஆத்மியின் "துடைப்பம்" –ஆட்சியை பிடித்தது, ஆனால் ஆட்சி அமைக்க போதிய ஆதரவு இல்லாதததால், 8 சீட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் "குப்பையை" கூட்டு சேர்த்துக்கொண்டது..
ஆக குப்பையை அகற்ற களமிறங்கிய துடைப்பம் கடைசியாக குப்பையுடனேயே கூட்டு சேர்ந்து கொண்ட அவலம் டெல்லியில் நடந்தது.—இது ஒரு புறம்..
இந்த ஆம் ஆத்மி துடைப்பம் உண்மையிலேயே துடைக்குமா/..அல்லது பேப்பரில் இருக்கும் விளம்பர துடைப்பமா? –பார்ப்போம்..
இந்திய சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று ஐ.ஆர்.எஸ். வரூமானவரி அதிகாரியான அரவிந்த் கேஜ்ரிவால், ஊர் ஊர் ஆக மாரிச்செள்ளவேண்டிய பதவியில் இருந்தாலும், அன்னை சோனியாவின் அருளால், எந்த ஊருக்கும் மாறுதல் ஆக்காமல், டெல்லிக்குல்லேயே மாறுதல் ஆகாமல் தொடர்ந்து இருந்தார்..ஆனால் அந்த சோனியாவையே எதிர்த்து பின்னாளில் போராட்டம் நடத்தினார்..
"காங்கிரஸ்–பாஜக எதுவுடன் கூட்டணி சேரமாட்டேன்" என வாக்குறுதி அளித்தார்..ஆனால் காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்தார்..
டெல்லி போலிஸ் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கட்டுப்பட்டது..அதன் அனுமதியில்லாமல் ஒரு போலிஸ் காரர கூட மாற்றும் அதிகாரம் டெல்லி அரசுக்கு இல்லை. இதை நன்றாக.தெரிந்த ஐ,ஆர்.எஸ். அதிகாரி கேஜ்ரிவால், "போலிஸ் சீர்திருத்தம் " கொண்டுவருவேன் என்று பொய்சொல்கிறார்..
ஜன்லோக்பால் மசோதா மட்டுமல்ல எந்த சட்டமும் இயற்றுவது சட்டமன்றம்தான்..இது தெரிந்த கேஜ்ரிவால், மக்கள் மன்றத்தில்சட்டமியற்றுவேன் என அடம் பிடிக்கிறார்.
காங்கிரசும் பாஜகவும் பணக்காரர் கட்சி என்று சொல்லும் கேஜ்ரிவாளின் கட்சியில் 28 க்கு 12 எம்.எல்.ஏ க்கள் கோடிஸ்வரர்கள்..
"மக்களை மேலும் பிச்சைக்காரகள் ஆக்கும் மற்ற அரசியல கட்சிகளுக்கு நான்தான் மாற்று" –என்று தேர்தல் கோஷம் எழுப்பினான்ர். ஆனால் இலவச மின்சாரம்–இலவச குடிநீர் என்று வாக்குறுதி அளித்தார்..
மொத்தத்தில் ஆம் ஆத்மி என்பது காங்கிரசின் "பி" டீம் என்பது வெட்டவெளிச்சமானது.. குப்பையை கூட்டி எரிய வேண்டிய துடைப்பம்– குப்பையுடன் கூட்டு சேர்ந்தது. .
நன்றி ; எஸ்.ஆர். சேகர் எம்.ஏ.பி.எல்
பாஜக மாநிலப் பொருளாளர்
குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ... |
முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ... |
பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.