சுனந்தாபுஷ்கர் மரணம் குறித்த விசாரணை முடியும்வரை மத்திய அமைச்சக பொறுப்பில் இருந்து ஒதுங்கி சசி தரூர் ஒதுங்கி இருக்கவேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
மத்திய அமைச்சராக இருக்கும் சசி தரூர் மனைவி சுனந்தாபுஷ்கர் டெல்லியில் உள்ள ஒருஓட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது மரணம்குறித்து பல்வேறு விதமாக பேசப்படுகிறது. சுனந்தா மரணத்தையொட்டி மத்திய அமைச்சர் பொறுப்பில் இருந்து சசிதரூர் ராஜினாமா செய்யவேண்டும் என்று பாரதிய ஜனதா உள்பட பல கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந் நிலையில் மத்தியில் ஐக்கிய முற்போக்குகூட்டணி அரசில் அங்கம்வகிக்கம் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் ஏறக்குறைய பாரதிய ஜனதா கட்சியின் கோரிக்கைக்கு ஆதரவுகொடுக்கும் வகையில் கூறியுள்ளது. சுனந்தாவின் மரணம் பெரிய பிரச்சினையாகும். அதனால் கொள்கைப்படி விசாரணை முடியும்வரை மத்திய அமைச்சக பொறுப்பில் இருந்து ஒதுங்கி இருக்கவேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் செய்திதொடர்பாளர் டி.பி.திரிபாதி டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்துள்ளார்
நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ... |
கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.