நரேந்திர மோடி பிரச்சாரம்செய்யவே தேவையில்லை. ராகுல் பேசினாலே, மோடி வெற்றிபெறுவார் என்று இல.கணேசன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழக கட்சிகளுடன் கூட்டணிகுறித்து பேசி வருகிறோம். இந்த கூட்டணியில் ஏற்கெனவே மதிமுக மற்றும் ஐஜேகே. உள்ளிட்ட கட்சிகள் இணைந்து விட்டன.
தற்போது தேமுதிக. மற்றும் பாமக. ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. எங்களது கூட்டணி திமுக. மற்றும் அதிமுக. கட்சிகளுக்கு சவால் விடும் கூட்டணியாக இருக்கும். திமுக-வில் இருந்து தனது மகனான முக.அழகிரியை நீக்கியது கட்சியில் தீவிரபிரச்சினை உள்ளதை காட்டுகிறது. தேர்தல்நேரத்தில் கட்சியை பலப்படுத்த நினைப்பார்கள், ஆனால், மிகப்பெரிய பொறுப்பு வகிக்கும் தென்மண்டல பொறுப்பாளரை நீக்கியது ஏதோ உட்கட்சி பிரச்சினையாக அல்லாமல், இந்த நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
குஜராத் கலவரத்துக்கு நரேந்திரமோடி காரணம் அல்ல என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்நிலையில் ராகுல் இதுசம்பந்தமாக பேசுவது வேதனையாக உள்ளது.
நரேந்திரமோடி நாடுமுழுவதும் சென்று தேர்தல் பிரச்சாரம் செய்யத் தேவையில்லை. ராகுல் பேசினாலே மோடி வெற்றி பெறுவார். பிரதமர் வேட்பாளராக ராகுல்காந்தியை நிறுத்த எந்த தகுதியும் இல்லாததால் தான், காங்கிரஸ் பிரதமர் வேட்பாளரை அறிவிக்காமல் இருந்துவருகிறது என்றார்.
முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ... |
அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல் நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ... |
1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.