மக்கள் மூட நம்பிக்கைகளை எதிர்த்துப்போராட வேண்டும். குழந்தைகளுக்கு அதிகபட்சகல்வியை வழங்க வேண்டும். இந்த இரண்டும் வளர்ச்சிக்கு முக்கியம். “கல்வி, ஒற்றுமை, போராட்டம்’ என்ற அம்பேத்கரின் வார்த்தைகள் என பா.ஜ.க.,வின் பிரதமர்பதவி வேட்பாளர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.
கேரளமாநிலம் கொச்சியில் தாழ்த்தப்பட்டோர் அமைப்பு ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடுசெய்த விழாவில் மோடி பேசியதாவது: நாட்டில் உள்ள அரசியல் நிகழ்வுகளை பரிசீலித்துப்பார்த்து, அடுத்த 10 ஆண்டுகள் தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கானதாக இருக்கும் என்பதை நம்பிக்கையுடனும் அடக்கத்துடனும் தெரிவித்து கொள்கிறேன்.
மக்கள் மூட நம்பிக்கைகளை எதிர்த்துப்போராட வேண்டும். குழந்தைகளுக்கு அதிகபட்சகல்வியை வழங்க வேண்டும். இந்த இரண்டும் வளர்ச்சிக்கு முக்கியம். “கல்வி, ஒற்றுமை, போராட்டம்’ என்ற அம்பேத்கரின் வார்த்தைகள் இன்றைக்கு மிகவும் பொருந்துகின்றன. நீதியைப்பெறுவது என்பது கெஞ்சிக் கேட்பதல்ல, அது ஒவ்வொரு குடிமகனின் உரிமையாகும்.
நாட்டில் கடந்த 60 ஆண்டுகளில் செய்திருக்கவேண்டிய பலபணிகள் செய்யப்படவே இல்லை. அவற்றை நிறைவேற்ற வேண்டியது என் கடமை என கருதுகிறேன். அந்த பணிகளில் ஒன்று தான், கேரள மாநிலத்தின் சமூக சீர்திருத்தவாதியான அய்யங்காளிக்கு நாடாளுமன்றத்தில் நினைவிடம் அமைப்பதாகும்.
காங்கிரஸ்கட்சி கடந்த 60 ஆண்டுகளாக பிரித்தாளும் கொள்கையை கடைப்பிடித்து வருகிறது. விஷவிதைகளை விதைத்து சமூகத்தைப் பிளவு படுத்துவதன் மூலம் ஆதாயம்பெற காங்கிரஸ் முயற்சித்து வந்துள்ளது. பா.ஜ.க ஆட்சிக்குவந்தால் தலித்துகள், ஆதிவாசிகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் குரல் ஓங்கி ஒலிக்கும் நிலை உருவாகும் . இன்னும் 100 நாள்களில் மத்தியில் ஆட்சிமாற்றம் ஏற்படும். அதன் பின், பிரித்தாளும் முயற்சிக்கு முடிவுகட்டப்படும்.
தாழ்த்தப்பட்ட சமூகத்துக்கு பி.ஆர்.அம்பேத்கர் அளித்த உரிமைகளை பறிக்க சதிநடக்கிறது. இதன் ஒரு பகுதியாகவே, ஜாதிரீதியிலான இடஒதுக்கீட்டை முடிவுக்குக் கொண்டுவருமாறு காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜனார்த்தன் துவிவேதி கோரிக்கை வைத்துள்ளார்.
தாங்கள் நாட்டுக்காகவே அனைத்தையும் செய்வதாக ஒருகுடும்பம் கூறிக்கொள்கிறது. ஆனால், நாட்டு மக்களையே என் குடும்பமாக நான் நினைக்கிறேன். குஜராத் முதல்வராக பொறுப்பேற்றதும் நான் என் குடும்பமான மக்களுக்கே அனைத்தையும் செய்தேன். நான்பிறந்த குடும்பத்துக்கு எதுவும் செய்து கொள்ளவில்லை என்றார் நரேந்திர மோடி.
செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ... |
அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ... |
கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.