சி.பி.ஐ இயக்குனர், திரு.ரஞ்சித் சின்ஹாவின் ஒரு அறிக்கை சமீபத்திய எகனாமிக் டைம்ஸ் இதழில் வெளியாகியிருந்தது. உண்மை வெளிவந்துவிட்டது. இஷ்ரத் ஜெஹான் வழக்கில், அமித் ஷா மீது குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யப்பட்டால், ஐக்கிய முற்ப்போக்கு கூட்டணியினர் மகிழ்வடைவர் எனத் தெரிவிக்கப்பட்டதாகவும் ஆனால், அமித் ஷாவுக்கு எதிராக சிபிஐ-க்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை
எனவும் அதில் அவர் கூறியிருந்தார். இது அரசுக்கெதிராக அதிக எதிர்மறை கருத்துக்களை தோற்றுவிக்கும் எனக் கருதப்பட்டதால், பின்னர் சிபிஐ இயக்குனர், தனது கருத்து தவறாக மேற்கோள் காட்டப்பட்டு விட்டதாக ஏற்றுக்கொள்ளமுடியாத விளக்கத்தை அளித்துள்ளார். சிபிஐ இயக்குனரின் சுதந்திரமான இந்த அறிக்கையும் விளக்கமும், தங்களுக்கேற்றவாறு சிபிஐயை கையாண்ட, பதவிக்காலம் முடிவடையும் தருவாயில் உள்ள ஐமுகூ அரசின் இந்தப் போக்கு விசாரணைக்குரியது.
வழக்கை மாற்றி அமைக்க காவல்துறையையும் புலனாய்வு அமைப்புகளையும் பயன்படுத்துவது ஒன்றும் புதிதல்ல. எமர்ஜென்சி காலத்தில், அரசியலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எதிராக சுமார் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட FIR எனும் முதல் தகவல் அறிக்கை புனையப்பட்டது. முன்னேச்ச்ரிக்கையாக கைது செய்தவர்களை மிசா சட்டத்திலும், மற்றவர்களை எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டதால் செல்லுபடியாகக்கூடிய இந்திய பாத்துக்கப்பு சட்டத்திலும் காவலில் வைக்கப்பட்டனர். காவல் துறையால் பதியப்பட்ட பெரும்பாலான FIRகள் ஒரே மாதிரியாக காணப்பட்டது. அதிகாலை நேரங்களில் பால் பூத்திலும் பஸ் ஸ்டாண்டிலும் காங்கிரஸ் அரசை தூக்கியெறிய வேண்டுமென்று பிரசாரம் செய்ததாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர். இவையெல்லாம் காவலில் வைக்கப்பட போதுமானவையல்ல. அப்பாவிகளை காவலில் வைப்பதும், போலி FIR பதிய முடியாது எனவும் ஒரு காவல் அதிகாரிகூட உறுதியாக எதிர்த்து நிற்காதது வருந்தத்தக்கது. அவர்கள் அனைவரும் கொடுமையான எமர்ஜென்சியில் ஒன்றுபட்டு பங்கள்ளித்தனர்.
2004-2014 கால ஐமுகூ அரசு, சிபிஐயை இப்படி கையாள்வதில் வல்லுனராகவே இருந்தது. இந்த காலகட்டத்தில் சிபிஐ அரசின் ஆளுகையிலேயே இல்லை. மேலும் மோசமாக ஆளுங்கட்சியின் கைப்பிடியிலேயே இருந்தது. வளைந்துகொடுப்பவர்கள் தான் சிபிஐ இயக்குனர் ஆனார்கள். சிபிஐ எனும் அமைப்பை அதன் இயக்குனர்தான் நிர்வாகிப்பார் என்றானது. அவர் முடிவே இறுதி என்றானது. குறிப்பிட்ட மனிதர்களின் மேல் குற்றம்சாட்டப்பட வேண்டுமா, வேண்டாமா எனும் அறிவுறுத்தலின்படியே புலனாய்வு அதிகாரிகள் விசாரணை கோப்புகளை தயாரித்தனர். அமைப்புக்குள் வழக்கமாக நடக்கவேண்டிய சரிபார்த்தால் எனும்போக்கே முழுமையாக சிதைந்துபோனது. ஓய்வுக்குப்பின் அத்தகைய இயக்குனர்களுக்கு புதிய பதவி வழங்கபட்டு கௌரவிக்கப்பட்டனர்.
ஓய்வுக்குப்பின் பதவி என ஆசைகாட்டப்பட்டனர். இது அவர்கள் வளைந்துகொடுப்பதை ஊக்கப்படுத்தும். UPSC இல் தலைமை பொறுப்பு முதல் உறுப்பினர் வரை, ஓய்வுக்குப்பின் இயக்குனர்களுக்கு வழங்கப்பட்டது. இஷ்ரத் ஜெஹான் வழக்கில் அமித் ஷாவை சிக்கவைக்க முயன்ற, அண்மையில் ஓய்வுபெற்ற ஒரு சிறப்பு இயக்குனருக்கு, ஓய்வுக்கு முன்னமே ஜாமியா மில்லா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பதவியளிக்கப்பட்டது. அது மட்டுமின்றி, மத்திய கண்காணிப்புத்துறையில் – CVC, விஜிலன்ஸ் கமிஷனர் பதவிக்கு அவ்ர் பெயரும் பட்டியலில் இருந்தது பத்திரிக்கைகளில் வெளிவந்திருக்கிறது.
சமீபத்தில் பிரதமருக்கு நான் எழுதிய விரிவான கடிதத்தில், மூத்த பாஜக தலைவர்களான அமித் ஷா, குலாப்சந்த் கடாரியா, ராஜேந்தர் ரத்தோர் முதலானோர் எவ்வாறு சிபிஐயால் தவறாக சிக்கவைக்கப்பட்டுள்ளனர் என முழு கரணங்களோடும் விவரித்திருந்தேன். அமித் ஷா வழக்கில் அவரை பிணையில் விடுவிக்கும்போது அவருக்கெதிராக எந்தவித முக்கிய முன் ஆதாரங்களும் இந்த வழக்கில் காணப்படவில்லை என உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. குலாப்சந்த் கடாரியாவுக்கு எதிரான வழக்கு போலி என மிகவும் கண்கூடாக தெரிந்ததால் முன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ராஜேந்தர் ரத்தோரின் வழக்கில் குற்றச்சாட்டு பதிவின்போது சிறப்பு நீதிபதியால் விடுவிக்கப்பட்டார். மாறாக, ஐமுகூ அரசோ சிறுபான்மை அரசாக, வெளியிலிருந்து ஆதரிக்கும் சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளால் பதவியில் அமரவைக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு விஷயங்களிலும் இந்த இரண்டு கட்சிகளின் ஆதரவை தக்கவைக்க சிபிஐயின் ஒத்துழைப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. இவைகளின் முக்கிய தலைவர்கள் வருமானத்திற்கும் அதிகமான சொத்து சேர்ப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
சிபிஐ இயக்குனர், தான் தவறாக எகனாமிக் டைம்ஸ் இதழில் மேற்கோள் காட்டப்பட்டுவிட்டதாக மறுத்துக்கூறிய விளக்கம் இந்நிலையில் ஏற்கத்தக்கதல்ல. அவர் தன் அறிக்கையை திரும்பப்பெற்றுக் கொண்டாலும், சிபிஐயின் வளைந்துகொடுக்கும் நிலை பற்றி பக்கம் பக்கமான ஆதாரங்கள் உள்ளன.
நன்றி ஸ்ரீ அருண் ஜேட்லி
மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர்
அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல் நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ... |
மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ... |
சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.