பிப்ரவரி,20, 2014 அன்று பதவிக்காலம் முடியும் உறுப்பினர்களுக்கு ராஜ்ய சபை ஒரு பிரிவு உபசார நிகழ்ச்சியை நடத்தியது. வழக்கமான சம்பிரதாயங்கள் தவிர்த்து, முக்கிய நிகழ்ச்சியாக, இந்திய அரசியலமைப்பு உருவாக்கம் குறித்த, 'சம்விதான்' எனும் தொலைக்காட்சித்தொடரின் சில பகுதிகள் ஒளிபரப்பப்பட்டது. இது ராஜ்யசபை செயலகத்தால் ராஜ்யசபா டிவி-காக தயாரிக்கப்பட்டது.
இந்தியாவின் மிகவும் புகழ் பெற்ற திரை இயக்குனர்களில் ஒருவரான ஷ்யாம் பெனகல் இயக்கியிருந்தார். கடந்த 6 ஆண்டுகளாக அவரும் நியமன உறுப்பினராக ராஜ்யசபையில் எங்களுடன் பணியாற்றியிருந்தார்.
பிரபல திரைப்பட மற்றும் நாடக நடிகர்கள் நடித்திருந்தனர். 10 பாகங்கள் கொண்ட இத்தொடர் முதலில் ராஜ்யசபா டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. ஒவ்வொரு பாகமும் ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகக்கூடியது. பாராளுமன்றத்தின் மையப்பகுதியை போன்றே அரங்கம், மும்பை ஸ்டுடியோவில் அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டது. அலங்கார பொருட்கள், ஓவியங்கள், மேடை, தனித்துவமான மின்விசிறிகள் போன்றவைகளுடன், அரங்கம் அவையின் மையப்பகுதியை போன்றே இருந்தது. அரசியலமைப்பு சபையின் தலைவர் டாக்டர்.ராஜேந்த்ர பிரசாத், வரைவுக்கமிட்டி தலைவர் டாக்டர்.B.R.அம்பேத்கர், ஜவஹர்லால் நேரு, சர்தார் படேல், மொஹமத் அலி ஜின்னா, கோவிந்த் வல்லப் பந்த், ராஜ்குமாரி அம்ரித் கௌர், மௌலானா அபுல்கலாம் ஆஸாத், N.கோபாலஸ்வாமி ஐய்யங்கார் போன்ற தலைவர்களாக ஒத்த முக அமைப்பு கொண்ட நடிகர்களே நடித்திருந்தனர். விவாதங்கள், ஆலோசனைகள், பேச்சுகள் போன்றவை குறிப்பேடுகளில் இருந்தே உபயோகிக்கப்பட்டுள்ளது.
இத்தொடர், இந்திய அரசியலமைப்பின் வரைவை திரையில் கண் முன்னே கொண்டுவரும் என என் பார்வையில் நம்பும் நான், தொடர் ஒளிபரப்பாவதை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன். வரலாறை புத்தகத்தில் படிப்பதைவிட திரையில் பார்க்கும்போது எளிதில் உள்வாங்கிக்கொள்ள முடியும். ராஜ்யசபை முழு செலவையும் ஏற்று தயாரித்த, லாபநோக்கமற்ற, , இத்தொடர், ராஜ்யசபை டிவியில் ஒளிபரப்பான பிறகு, தூர்தர்ஷனிலும், தனியார் தொலைக்காட்சிகளிலும் மற்ற எல்லா ஊடகங்களிலும் ஒளிபரப்பனால் பெரும்பான்மையினருக்கு பயன்படும். இத்துறையில் ஆர்வமுள்ள அனைவரும் தவறாமல் பார்க்கவேண்டிய தொடர். குறிப்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், அரசியலில் ஈடுபட்டிருப்பவர்கள், ஊடகத்துறையினர், கல்வியாளர்கள், மாணவர்கள் கண்டிப்பாக பார்க்கவேண்டிய தொடர். இதை யூ-ட்யூபிலும் ஒளிபரப்பினால் உலகம் முழுவதும் பார்க்க வாய்ப்பு கிட்டும்.
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் தொடர் 'பிரதான் மந்த்ரி' போல், வரலாற்றை தொலைக்காட்சியிலும் டிஜிட்டல் ஊடகத்திலும் வழங்குவது, ஆர்வமுள்ளவர்களுக்கு மிகவும் பயன்படும். நல்ல தொடர்களான 'பிரதான் மந்த்ரி' மற்றும் 'சம்விதான்' பார்வையாளர்களை கவர்ந்தால், இந்தியாவின் வரலாற்று சேனல் உதயமாகும் என நம்பலாம்.
நன்றி ஸ்ரீ அருண் ஜேட்லி
மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர்
டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ... |
மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ... |
சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ... |
Leave a Reply
You must be logged in to post a comment.