விரைவில் தேர்தல் வரவிருக்கிறது. இதற்குபின்னர் காங்கிரசும், சமாஜ்வாடி கட்சியும் காணாமல் போகும். இங்கு வந்திருக்கும் காவி அலை சுனாமியாக உருவெடுக்கும், இதில் காங்கிரஸ் வேரோடுசாயும். என லக்னோவில் திரண்ட மக்கள்வெள்ளத்தில் பாஜக., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பேசினார்.
இந்த கூட்டத்தில் சுமார் 13 லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றனர் . இந்தகூட்டத்தில் அவர் மேலும் பேசுகையில், மக்கள் இங்கு செங்கடலாக திரண்டுவந்துள்ளனர். செம்புயலாக உருவெடுத்துள்ளனர். செம்படையின் அலை நாளை சுனாமியாக உருவெடுக்கும். வரவிருக்கும்தேர்தலில் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி கட்சி காணாமல் போகும். பாஜக., விவசாயிகள் பக்கமே எப்போதும் நிற்கும் . இந்தியாவில் மாற்றம் உருவாக்க விரும்பினால் இதற்கானபோராட்டம் உபி.,யில் இருந்து துவங்கவேண்டும் என்பது நான் அறிந்துள்ளேன். இதுதான் டில்லிக்கு செல்லும் பாதையாக இருக்கமுடியும். இங்கு ஆளும் நபர்கள் கலாச்சாரத்தை சீரழித்து வருகின்றனர். இவர்களுக்கு இனியும் ஓட்ளிக்காதீர்கள். லக்னோ வரும்போதெல்லாம் எனக்கு வாஜ்பாய் நினைப்புத்தான் வருகிறது. அவரிடம் இருந்து நான் அதிகபாடங்களை கற்றுள்ளேன்.
நேற்று உத்தரபிரதேசத்தில் அநேக இடங்களில் கனமழை பெய்தது. அதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தனி ஆள் இல்லை. அவர்களுடன் நான் இருக்கிறேன். நாளை 10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். அவர்களுக்கு நான் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். அவர்கள் இந்த நாட்டின் எதிர்காலம். உ.பி. 8 பொதுக்கூட்டங்கள் உள்ளது. ஒவ்வொரு கூட்டம் ஒன்றைவிட மிகவும் நன்றாக உள்ளது.
இங்கு ஆளும் சமாஜ்வாடிகட்சி சமாஜ் விரோதி பார்ட்டி. கடந்த ஒரு ஆண்டில் இங்கு பெண்களுக்கு எதிரான குற்றம்தொடர்பாக 20 ஆயிரம் வழக்குகள் பதியப்பட்டுள்ளன, இங்கு 150 மோதல்கள் ஏற்பட்டன. முலாயம் சிங் இங்கு வளர்ச்சிபணிகள் எதுவும் கொண்டு வரவில்லை. முஷாப்பர் நகர் கலவரம் உச்சக் கட்டமாக நடந்தது. இங்கு சட்டம் ஒழுங்கு கெட்டுப்போனது. இவர் வளர்ச்சிப் பணிகள் குறித்து பேசுகிறார். ஆனால் நான் ஆளும் குஜராத்தில் கடந்த 10 ஆண்டில் ஏதேனும் கலவரம் உண்டா ? முலாயம் சிங் ஓட்டுவங்கி அரசியல் நடத்துகிறார். குஜராத் குறித்து முலாயம் சிங் தவறான தகவல்களை தருகிறார். உபி.,யில் இளைஞர்கள் யாரும் எதுவும் பெறாமல், காணாமல்போனால் அது பெரிய விஷயமாக கருத்தப்டுவதில்லை. ஆனால் ஒரு அமைச்சரின் எருமைமாடு காணாமல் போகும் போது இது பெரிய விஷயமாக எடுத்து கொள்ளப்படுகிறது.
இங்குள்ள மத்திய அமைச்சர் பேனி பிரசாத் வர்மா, சல்மான் குர்ஷித், ஜெய்சிவால் ஊழல் வாதிகள். இவர்கள் நல்ல நிர்வாகத்தை தர தவறி விட்டனர். இவர்களுக்கு தலைவராக இருந்த பிரதமரும் ஒருகுற்றவாளி. ஆனால் அவர்கள் மதச் சார்பின்மை பற்றி பேசுகின்றனர். தேர்தல்நேரத்தில் மட்டுமே அவர்கள் இந்த மதச்சார்பின்மையை எழுப்புவர். இதனை தங்களின் மறைவிடமாக வைத்துள்ளனர் என்றார்.
இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ... |
பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ... |
அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.