"மஹாத்மா செய்தது ஒருவேளை தவறாக இருக்கலாம்…": ராஜ்மோஹன் காந்தி வலைப்பூவில் என் பதிவுகளின் இரண்டாவது தொகுப்பு, 'மை டேக்' கடந்த டிசம்பரில் வெளிவந்தது. இதில் சர்தார் படேல் குறித்த சில பதிவுகளும் அடக்கம்.
முக்கிய மாநிலங்களை ஒருங்கிணைக்க படேல் அவர்கள் ஆற்றிய பங்கு, அதிலும் குறிப்பாக இந்திய ஒருங்கிணைப்பு உடன்படிக்கையில் கையெழுத்திட மறுத்துவந்த ஹைதராபாத்
நிஜாமை பணிய வைத்த பாங்கும் அளவிட முடியாதது.
நிஜாமிற்கு எதிரான படேல் அவர்களின் ராணுவ நடவடிக்கைக்கு பிரதம மந்திரி நேரு உடன்படாதது பலருக்கு தெரியாது, அதேபோல்தான் ஜம்மு காஷ்மீர் மாநில விஷயத்திலும். மேலும் நேரு, ஹைதராபாத் பிரச்சினையை ஐ.நா.பாதுகாப்பு கௌன்சிலுக்கு வேறு கொண்டு செல்ல விரும்பினார்! சுதந்திரத்திற்கு பின் முதல் பிரதமராக பன்டிட் நேருவிற்கு பதில் சர்தார் படேலை காந்திஜி தேர்ந்தெடுத்திருந்தால் இந்தியாவின் ஆரம்ப கால வரலாறே மாறியிருக்கும் என்பது, இந்தியாவின் ஆராம்பகால வரலாறை ஆராய்ந்து பார்ப்பவர்களுக்கு உடனே புரியும்,
ராஜ்மோஹன் காந்தி எழுதிய, சர்தார் பட்டேலின் வாழ்க்கை வரலாறை படிக்கும்போது முன்னுரையில் ராஜ்மோஹன் சொல்லும் ஒரு விஷயத்தை முக்கியமாக இங்கே குறிப்பிட வேண்டும். ஆரம்பத்திலேயே ஜனாதிபதி ராஜேந்திர பிரசாதின் கூற்று என்று ராஜ்மோஹன் இப்படி குறிப்பிடுகிறார்: 'பொதுவாக சொன்னால் இந்திய அரசு சர்தாருக்கு சாதகமாக இருந்ததில்லை'. மேலும் ராஜ்மோகன் அந்த முன்னுரையில் எழுதுகிறார்:
'சுதந்திரத்தால் நமக்கு, சட்ட அங்கீகாரமும் அதிகாரமும் கிடைத்தது, உண்மையில் சொல்லப்போனால், காந்தி, நேரு மற்றும் படேல் ஆகிய மூவரின் முயற்சிக்குமே பங்குண்டு. ஆனால் அங்கீகாரத்தின் பெரும்பகுதி நேருவுக்கும், கடமைக்கு காந்திக்கும், மிகவும் கஞ்சத்தனமாக படேலுக்கும் கிடைத்தது. ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் தன் நாட்குறிப்பில் 1959, மே 13 அன்று பின் வருமாறு எழுதுகிறார்: "சர்தார் படேலின் ராஜதந்திரமும் கண்டிப்பான நிர்வகிப்புதான் முக்கிய காரணம் என்பதை, இந்தியா இந்த தருணத்தில், சிந்திக்கவும், பேசவும் வேண்டும். இருப்பினும் நாம் அவரை ஒதுக்கித்தள்ளிவிட்டோம்"
'1989-ல் வந்த, நேருவின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா, ஆயிரக்கணக்கான விளம்பர பலகைகளும், டிவி தொடர்களும், விழாக்களும் என பல்வேறு ஊடகங்களில் விமரிசையாக கொண்டாடப்பட்டது. மாறாக 1975, அக் 31 அன்று, எமெர்ஜன்சி அறிவிக்கப்பட்ட நான்கு மாதத்தில், படேலின் நூற்றாண்டு தினம் வந்தது. இந்திய அரசும் அதிகார வர்க்கமும் முழுமையாக அலட்சியப்படுத்தியது. அன்றிலிருந்து, நவீன இந்தியாவின் மதிப்புமிக்க மகன்களில் ஒருவரான அவர் திரை போட்டு மூடப்பட்டுவிட்டார். வேண்டும் சமயங்களில் மட்டும் அரைகுறையாக திரை விலக்கப்படும். ஆனால் திரையை தூக்கி வீசி விட்டு, சர்தார் படேலின் வரலாறை இன்றைய தலைமுறை பார்க்குமாறு வைக்க வேண்டும் என்பதுதான் என் முதல்விருப்பம். அவர் முழுவதும் பரிசுத்தர் இல்லைதான், சில தவறுகள் இருக்கலாம். அதை நான் மூடி மறைக்கவோ, அதற்கு முயற்சிக்கவோ இல்லை. அவருடைய வாழ்க்கையை அறிந்து கொண்டால், அதில் சிலராவது உணர்வார்கள், விரக்தியும் கடினமான காலங்களில், இந்தியாவின் முக்கிய சக்தியாக விளங்கிய, நினைத்து போற்றப்படவேண்டிய மனிதர் என்று'.
'சுதந்திர இந்தியாவின் முதன்மையான பதவியை நிரப்பும் நேரம் வந்தபோது, காந்தி படேலுக்கு அநீதி இழைத்தாரா, இல்லையா என்பது அடிக்கடி எழும் கேள்வி. நான் விசாரித்து அறிந்த பதிலை, இந்தப்புத்தகத்தில் காணலாம். நியாயத்துக்கு சற்று கீழேதான் படேல் விஷயத்தில் காந்தி நடந்து கொண்டார் என்று சிலர் கூறுகிறார்கள். படேலின் சரிதையை எழுதும்போது இக்கருத்தையும் பரிசீலித்துதான், மேற்குறிப்பிட்ட என் பதிலை நான் தீர்மானித்தேன். நான் இதில் தவறிழைத்தால், மாகாத்மாவின் பேரன்களில் யாராவது என்னிடம் நஷ்டஈடு கோரிவிடும் வாய்ப்பு உள்ளது. மேலும் நான் தேசத்தை உருவாக்கியவருக்கு என் கடமையை செய்ய தவறியவனாவேன்'.
என் 14 வயதில் நிகழ்ந்த அவருடனான என் மெல்லிய தொடர்பை இங்கே நினைத்து பார்க்கிறேன். 1949-ல் என் பெற்றோர் மற்றும் கூடப்பிறந்தவர்களுடன் #1, ஔரங்காசீப் சாலையிலிருந்த (புதுடெல்லி) சர்தாரின் இல்லத்துக்கு சென்றிருந்தோம். புல்வெளியில் அவருடன் தனிமையில் இருக்கும் வாய்ப்பை பெற்றேன். ஆறடி இடைவெளியில் எதிரெதிரே நாற்காலிகளில் அமர்ந்திருந்தோம். என்னைப்பார்த்து புன்னகைத்தார்; உதடுகளும் கண்களும் என்னை பரிகசிப்பது போலவும்,ஆராய்வது போலவும் உணர்ந்தேன். சங்கடப்பட்டு பார்வையை விலக்க முயன்றேன், முடியவில்லை – பெருமையை இப்படித்தான் வெளிக்காட்டினேன். பிறகு மேலும் உற்று நோக்குகையில் அதில் பாசத்தை கவனித்தேன். இந்த இரும்பு மனிதர் கதகதப்பான இதயம் படைத்தவர் என்று அந்த கணத்தில் உணர்ந்தேன்', இவ்வாறு அந்த முன்னரை போகிறது…
காந்தி பிரதமரை தேர்ந்தெடுக்கும் முடிவில் தவறிழைத்திருக்கலாம் என்று, காந்தியின் பேரன் ராஜ்மோஹன் வெளிப்படையாக சொல்வது – அதனால் நஷ்டஈடு வழங்கும் நிலையும் வரலாம் – அவருடைய பெருந்தன்மையை மட்டுமல்ல, சர்தார்தான் சிறந்த தேர்வாக இருந்திருக்க முடியும் என்ற பொதுக்கருத்தும் வெளிப்படுகிறது.
கடைசி துணுக்கு:
ராஜ்மோஹன் காந்தியின் இப்புத்தகம், ஆர்.எஸ்.எஸ்.தான் காந்தி கொலைக்கு காரணம் எனும் காங்கிரசாரின் அவதூறு பிரசாரத்திற்கு சரியான நெத்தியடி. புத்தகத்தின் 472வது பக்கத்தில், நேருவுக்கு படேல் எழுதிய 27.02.1948ம் தேதியிட்ட கடிதத்தை மேற்கோள் காட்டுகிறார். அவை:
"பாபுஜியின் படுகொலை வழக்கு விசாரணையின் போக்கை தினமும் நான் கவனித்து வருகிறேன். சஞ்சீவியுடன் (தலைமை புலனாய்வு அதிகாரி மற்றும் காவல் துறை தலைவர்) அன்றைய தின முன்னேற்றங்களை ஆலோசித்து, ஐயங்கள் எழுந்தால் ஆணையும் இடுவதில் பெரும்பாலான மாலை நேரத்தை செலவிடுகிறேன்.
குற்றம் சாட்டப்பட்ட எல்லாரும் நீண்ட, விரிவான வாக்குமூலம் அளித்துள்ளார்கள். ஆர்.எஸ்.எஸ் இதில் எவ்வகையிலும் ஈடுபடவில்லை என்பது, இந்த வாக்குமூலங்கள் தெளிவாக விளக்குகிறது."
நன்றி; ஸ்ரீ.L.K.அத்வானி
கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ... |
முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ... |
தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.