ஆர். எஸ்.எஸ் ஷாக்காவிற்கு காந்தி உட்பட பெரும் தலைவர்கள் வந்திருக்கிறார்கள். மகாத்மா காந்தி 1934 ஆம் ஆண்டு வார்தாவில் உள்ள ஆர். எஸ்.எஸ் முகாமிற்கு சென்றதைப் பற்றி தன்னுடைய அனுபவமாக குறிப்பிட்டது – நான் ஆர். எஸ். எஸ். முகாமிற்கு சென்ற போது இரண்டு விஷயங்களை கண்டு ஆச்சிரியப்பட்டேன். ஒன்று சுயம் சேவகர்கள் மிகவும் ஒழுக்கமாக நடந்துகொண்டார்கள், மற்றொன்று அவர்களிடத்தில் தீண்டாமையை பார்க்கமுடியவில்லை.
டாக்டர் அம்பேத்கர் 1939 ஆம் ஆண்டு புனேயில் உள்ள ஆர்.எஸ்.எஸ் முகாமிற்குச் சென்று சொற்பொழிவு ஆற்றிய÷£õx குறிப்பிட்டது – நான் இன்றுதான் முதன்முறையாக ஒரு ஆர்.எஸ்.எஸ் முகாம்மிற்கு வந்திருக்கிறேன். இங்கு உயர்ந்த ஜாதி தாழ்ந்த ஜாதி என்ற பாகுபாடில்லாமல் அனைவரும் சமம்மாக நடத்தப்படுகிறார்கள். ஒரு சுயம்சேவகர் மற்ற சுயம்சேவகர் எந்த ஜாதியை சேர்ந்தவர் என்பதை பற்றி கவலைப்படுவதில்லை. இதை பார்க்கும்பொழுது மிகவும் மகிழ்சியாக இருக்கிறது
இந்திய முன்னாள் ஜனாதிபதி சாகிர் ஹுசைன் 1949 ஆம் ஆண்டு மோங்கியார் என்ற இடத்தில் நடந்த ஒரு இஸ்லாமிய விழாவில் ஆர். எஸ்.எஸ் பற்றி தெரிவித்தது –ஆர்.எஸ்.எஸ் வன்முறையை தூண்டுகிறது, முஸ்லீம்களுக்கு எதிராக செயல்படுகிறது என்பது முற்றிலும் தவறு. முஸ்லீம்கள் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திடமிருந்து பரஸ்பர அன்பு, ஒத்துழைப்பு மற்றும் செயல்பாட்டுத் திறன் ஆகியவற்றை கற்றுக்கொள்ளவேண்டும்
சர்வோதயா இயக்கத்தின் தலைவர் ஜெய பிரகாஷ் நாராயணன் 1977 ஆம் ஆண்டு ஆர். எஸ்.எஸ் ஷாக்காவில் பங்கு கொண்டபோது தெரிவித்தது – ஆர்.எஸ்.எஸ். ஒரு புரட்சிகர இயக்கம். இந்தியாவில் வேறெந்த இயக்கமும் ஆர். எஸ்.எஸ்க்கு அருகில் கூட வரமுடியாது. ஆர்.எஸ்.எஸ் ஆல் மட்டும்தான் சமுதாயத்தை மாற்றமுடியும், ஜாதியத்தை ஒழிக்க முடியும், ஏழைகளின் கண்ணீரை துடைக்கமுடியும். நவ பாரதத்தை உருவாக்கும் முயற்சியில் இருக்கும் இந்த புரட்சிகர இயக்கத்தின்பால் எனக்கு பெரிய எதிர்பார்பு இருக்கிறது.
பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ... |
உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ... |
முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ... |
Leave a Reply
You must be logged in to post a comment.