விலைவாசி உயர்வு மற்றும் ஊழலை கட்டுபடுத்தாவிட்டால் எகிப்து போன்ற சூழ்நிலை இந்தியாவிலும் உருவாகும் என பா ஜ க எச்சரித்துள்ளது.
பா ஜ கவின் செய்தி தொடர்பாளர் தருண் விஜய் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது : ஊழலும், விலைவாசி-உயர்வும் மிகப்பெரிய பிரச்னை என்று தலைமை செயலர்கள்
மாநாட்டில் பிரதமர் ஒப்பு கொண்டுல்லார் இதன் மூலம் அவர் மீது பாரதிய ஜனதா குற்றம்சாட்டிவந்ததை ஏற்றுக்கொண்டுள்ளார்.
விலைவாசி உயர்வும், ஊழலும், ஏதோ வானத்திலிருந்து குதித்து வந்துவிடவில்லை . சோனியா காந்தியினுடைய கட்டுப்பாட்டில் இயங்கும் பிரதமர் மன்மோகன்சிங்கின் ஆட்சியினுடைய உருவாக்கம் இவை. பிரிட்டிஷார் இந்தியாவிலிருந்து கொள்ளையடித்து சென்றதைவிட அதிகஅளவு பணம், இந்த நாட்டிலிருந்து வெளி-நாடுகளுக்கு எடுத்துச்செல்லப்பட்டது மன்மோகன் சிங்கின் ஆட்சி காலத்தில் தான் என்று வரலாறு கூறப்போகிறது.
ஊழலாலும், விலைவாசிஉயர்வாலும் மக்கள் கோபமம் அடைந்துள்ளனர் என்பதை பிரதமர் முதல் முறையாக ஒப்பு கொண்டுள்ளார். இந்த பிரச்னைகளுக்கு அவர் தீர்வு காணாவிட்டால், எகிப்தில் ஹோஸ்னி முபாரக் சந்தித்துவருவதைவிட மிகப் பெரிய மக்கள் எழுச்சியை பிரதமர் சந்திக்க நேரிடும் என்றார் அவர்.
{qtube vid:=8JFep9uJL6w}
சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ... |
இதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை ... |
கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.