பாஜக.,வின் வெற்றி என்பது முன்பே தீர்மானிக்கப்பட்ட ஒன்றுதான்

 மாட்டுத் தீவின ஊழல்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ராஷ்டிரிய ஜானதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவுடன் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளதை ஜார்கண்டமாநிலத்தில் தேர்தல் பிரச்சார மேற்கொண்ட பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி கடுமையாக விமர்சித்துள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஜாமுர்த்தாலியா மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது :

நாட்டின் வளங்களை பாதுகாக்க 1.25 கோடி மக்கள் பாதுகாவலாராக வேண்டும் என்று ராகுல் கூறுகிறார். ஆனால் அவர் கறை படிந்த தலைவர்களுடன் கூட்டணி வைத்துள்ளார். உங்களுடன் கூட்டணி வைத்துள்ளவர்கள் எந்த மாதிரியானவர்கள். காங்கிரஸ்சுடன் கூட்டணி வைத்துள்ளவர்கள் சிறிது காலம் முன்தான் சிறையில் இருந்து வெளியேவந்தவர்கள்.

ராகுல்காந்தியின் காவலர்களான அசோக்சவான் ஆதர்ஷ் ஊழலில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். லாலுபிரசாத் யாதவ் மாட்டுத்தீவின ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டவர். இதுபோன்ற காவலர்கள் தான் உங்களிடம் இணைந்து நாட்டை பாதுகாக்கும் பணியில் ஈடுபடவுள்ளனர். பாலுக்கு பாதுக்காப்பாக வைக்க முடியும் என்ற பூனையை நான் இதுவரை பார்த்ததில்லை.

மத்திய நிதியில் இருந்து செல்லும் ஒருரூபாயில் 15 பைசா மட்டுமே மக்களை சென்றடையும் என்ற முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் பேச்சை நினைவு கூர்ந்த மோடி, இது ” கை”யின் அதிசயம்தான் என்று என்றார்.

பாஜக.,வின் வெற்றி என்பது இந்ததேர்தலில் முன்பே தீர்மானிக்கப்பட்ட ஒன்றுதான் . பா.ஜ.க 300 இடங்களில் வெற்றிபெறுவதை மக்கள் உறுதி செய்யவேண்டும். ஏனெனில் இந்தியாவுக்கு எதிராகசெயல்படும் நாடுகள் தங்கள் நிலையை மாற்ற வலுவான அரசாங்கம் உறுதியளிக்கும். நமது நாட்டில் வலுவான அரசாங்கம் இருந்தால் அமெரிக்காபோன்ற வல்லரசு நாடுகள்கூட ஏற்றுக்கொள்ளும்.

ஜர்கண்ட் இயற்கைவளங்களை கொண்ட வளம்மிக்க மாநிலம். ஆனால் இங்குள்ள மக்கள் ஏழைகளாக உள்ளனர். ஜார்கண்ட் மாநில மக்களை ஏழ்மையில் இருந்து நாங்கள் மீட்டெடுப்போம். என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மகாராஷ்டிரா மாநிலத்தின் முதலம ...

மகாராஷ்டிரா மாநிலத்தின் முதலமைச்சர் பதவி முடிவு பிரதமரின் முடிவே இறுதியானது -ஏக்நாத் ஷிண்டே மஹாராஷ்டிராமாநிலத்தில் முதலமைச்சராகபணியாற்றியதில்திருப்திகரமாகவும், தாம் பொதுவான மனிதர்கள் என்றும் இடைக்கால ...

மகாராஷ்டிர அறிந்து கொள்ள வேண்ட ...

மகாராஷ்டிர அறிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் மகாராஷ்டிர மாநிலத் தேர்தல்களில் மஹாயுதி அணி வெற்றி, MVA ...

முக்கிய திட்டங்களுக்கு மத்திய ...

முக்கிய  திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் இந்தியாவில் இயற்கை வேளாண்மையை மேம்படுத்து வதற்கான திட்டம் உள்ளிட்ட ...

குழந்தை திருமணம் இல்லாத இந்திய ...

குழந்தை திருமணம் இல்லாத இந்தியாவை உருவாக்கும் வகையில் அன்னபூர்ணா தேவி இன்று பால் விவாகம் முகத் பாரத் தேசிய இயக்கத்தை தொடங்கி வைக்கிறார் குழந்தை திருமணம் இல்லாத இந்தியாவை உருவாக்கும் வகையில் மத்திய ...

தமிழக கூட்டுறவு வங்கிக்கு அமித ...

தமிழக கூட்டுறவு வங்கிக்கு அமித்ஷா விருது வழங்கினார் டில்லியில் சர்வதேச கூட்டுறவு ஆண்டு விழா நேற்று நடந்தது. ...

அரசியலமைப்பு சட்டத்திற்கு உட் ...

அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு எனது  கடமைகளை செய்கிறேன் – பிரதமர் மோடி '' யாருடைய அதிகார வரம்பையும் மீறாமல், அரசியலமைப்பு சட்டத்திற்கு ...

மருத்துவ செய்திகள்

காரம்

காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ...

பப்பாளியின் மருத்துவக் குணம்

கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ...

நமது ஆரோக்கியத்தில் முட்டையின் பங்கு

முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . ...