நடிகர் ரஜினி காந்த் போன்ற நடுநிலையாளர்கள் அனைவரும் தே.ஜ.,கூட்டணிக்கு ஆதரவுதெரிவிக்க வேண்டும் என்று பா.ஜ.க தேசியச்செயலாளர் தமிழிசை சவுந்தர் ராஜன் கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னை தி.நகரில் உள்ள கட்சித் தலைமையகமான கமலாலயத்தில் நிருபர்களுக்கு புதன் கிழமை அவர் அளித்த பேட்டி:
நாடாளுமன்றத் தேர்தலில், ஊழலுக்கு எதிராகவும் வளர்ச்சியை மையப் படுத்தியும் பிரச்சாரம் செய்யப்படுகிறது. பா.ஜ.க தவிர வேறு எந்தக்கட்சியும் ஊழலுக்கு எதிராக குரல் கொடுப்பதில்லை. அவற்றுக்கு அந்தத்தகுதியும் இல்லை. மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பிரச்சாரம் செய்யும் போது, "தவறுசெய்திருந்தால் தலையில் குட்டுங்கள். சிவகங்கையிலேயே தங்கியிருந்து மக்கள்பணியாற்ற விரும்புகிறேன்" என்று சொல்லி வருகிறார். இனிமேல் டெல்லியில் அவருக்கு வேலை இருக்காது.
தமிழகத்தில் பலதிட்டங்கள் முழுமையாக முடிக்கப்படவில்லை. அரசு பன்நோக்கு உயர் சிறப்பு மருந்துவமனையில் மருந்துகள் கிடைக்காதநிலை உள்ளது. இந்நிலையில், மத்திய அரசு திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுப்போம் என்கிறார் ஜெயலலிதா.
நதிகளை இணைத்தால்தான் மாநிலங்களுக்கு இடையிலான தண்ணீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும். முந்தைய பாஜக ஆட்சியில், நதிகள் இணைப்பு பற்றிய அறிவிப்பு வெளியிட்டதும் அதற்கு நிதி உதவி அளித்து முழு ஆதரவு அளிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்தார். 1996-ம் ஆண்டு தமிழகத்தில் நிலவிய அரசியல் சூழலில், அப்போதைய ஆட்சி அகற்றப்படாவிட்டால் மக்களை ஆண்டவனால்கூட காப்பாற்ற முடியாது என்று ரஜினிகாந்த் குரல் கொடுத்தார். அதுபோல, இப்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சியை அகற்றா விட்டால், நாட்டுமக்களை ஆண்டவனால்கூட காப்பாற்ற முடியாது என்று அவர் குரல்கொடுக்க வேண்டும்.
ரஜினியை போன்ற நாட்டு நலனில் அக்கறை கொண்டவர்கள், நடு நிலையாளர்கள், நதிகள் இணைப்பு உள்ளிட்ட நல்ல திட்டங்கள் வரவேண்டும், நாடு காப்பாற்றப்படவேண்டும் என நினைப்பவர்கள் அனைவரும் பாஜக கூட்டணியை ஆதரிக்கவேண்டும். பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, இன்னும் 2 வாரத்தில் தமிழகத்துக்கு வருவார் என்று தமிழிசை சவுந்தர்ராஜன் கூறினார்.
கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ... |
நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ... |
ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ... |
Leave a Reply
You must be logged in to post a comment.