நடந்துமுடிந்த பாராளுமன்ற தேர்தலில் அமோக வெற்றிபெற்று மத்தியில் பாஜக ஆட்சி அமைக்க உள்ளது. நரேந்திரமோடி பிரதமர் ஆக உள்ளார். பாஜக ஆட்சி மன்றக் குழு கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. அப்போது கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. ஆட்சி மன்றக்குழு கூட்டத்தை அடுத்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்துபேசிய ராஜ்நாத்சிங் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை தந்த பாஜக தொண்டர்களுக்கு ராஜ்நாத்சிங் நன்றி தெரிவித்தார்.
பாஜக மீது முழுநம்பிக்கை வைத்து வெற்றிபெறசெய்த நாட்டு மக்களுக்கு நன்றி. தற்போது நாட்டுமக்கள் நரேந்திர மோடியை நாட்டுமக்கள் பிதமராக தேர்வுசெய்துள்ளனர். கட்சி தலைவர்கள் கூட்டம் கூட்டப்பட்டு குஜராத் எம்எல்ஏ.க்கள் விருப்பத்தின்படி மாநிலத்தின் அடுத்த முதல்வர் தேர்வு செய்யப்படுவார். குஜராத் முதல் மந்திரியை தேர்வுசெய்ய தாவார் சாந்த்கெலாட் மற்றும் ஓம் மாத்தூர் ஆகியோர் பார்வையாளர்களாக குஜராத் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மே 20ல் பாரதீய ஜனதா கட்சியின் பாராளுமன்ற குழு கூடி, நரேந்திரமோடியை முறைப்படி பிரதமராக தேர்வுசெய்யும். நரேந்திர மோடி பதவி ஏற்கும் நாள் இன்னும் முடிவு செய்யப்பட வில்லை என்று ராஜ்நாத்சிங் கூறினார்.
அப்போது நரேந்திர மோடி பேசுகையில், பாரதீய ஜனதாவை வெற்றிபெற செய்த நாட்டுமக்களுக்கு எனது நன்றி. மேலும், வாக்காளர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்திய மீடியா நண்பர்களுக்கு எனது நன்றி என்று கூறினார்.
சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ... |
வயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே ... |
இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.