நடந்தமுடிந்த மக்களவை தேர்தலில் உ.பி., மாநிலம் வாரணாசியில் நரேந்திரமோடி போட்டியிட்டு வெற்றிபெற்றார். வெற்றிபெற்ற பின்னர் சனிக் கிழமை வாரணாசி சென்ற அவருக்கு பா.ஜ.க.,வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கு அவர் ஊர்வலமாக சென்று கங்கை நதிக் கரையில் வழிபாடுசெய்தார். கங்கை நதியில், கங்கை ஆராத்தி நிகழ்ச்சிக்கு பின்னர் பேசிய நரேந்திரமோடி கூறியதாவது:-
தேர்தலில் மிகப் பெரிய வெற்றி கிடைத்தற்கான பெருமை தொண்டர்களையே சாரும் . நான்பெற்ற வெற்றியை 126 கோடி மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன். இங்கு குறைந்தளவு பிரசாரம்செய்தாலும், மக்கள் மிகப் பெரிய அளவில் ஆதரித்துள்ளனர். வாரணாசி மக்களுக்கு என் வணக்கத்தை தெரிவித்துகொள்கிறேன். மக்கள் எனது அமைதியை புரிந்துகொண்டார்கள்.
வாரணாசியில் வேட்புமனுவை தாக்கல் செய்தபோதே நான் இந்த மண்ணின் மைந்தானாக உணர தொடங்கினேன். காசியைபற்றி எனக்கு ஒரு கனவு உள்ளது. அதை வாரணாசி மக்கள் உதவியுடன்தான் பூர்த்தி செய்யமுடியும்.
நான் வாரணாசியை வளர்ச்சி பாதைக்கு எடுத்துசெல்வேன். வாரணாசியில் எந்த ஒரு தெருக்களைகூட நாங்கள் அசுத்தமாக விட்டுவிடப் போவது இல்லை. உங்கள் ஓட்டுகள் மட்டும் எனக்குதேவை இல்லை. உங்கள் ஆதரவும் தொடர்ந்து தேவை. இந்த இலக்குகளை அடையை உங்கள் ஒத்துழைப்புதேவை.
1947க்கு பிறகு பெரும்பாலான அரசாங்கம் காங்கிரசால் அமைக்கப்பட்டது. இந்ததேர்தலில் பாஜக பெரும்பானைமையாக வெற்றி பெறவைத்ததற்கு நாட்டுக்கு நன்றிசொல்ல நான் விரும்புகிறேன். இந்தமுறை காங்கிரஸ் கட்சியால் பிரதான எதிர்கட்சியாககூட இருக்க முடியவில்லை. நான் வாரணாசியில் போட்டியிட வேண்டும் என்று ராஜ்நாத் சிங்கிடம் வாதத்தில் ஈடுபடவில்லை. வாரணாசி தொகுதியில் நான் போட்டியிடுவது கடவுளின்விருப்பம். என்று அவர் பேசினார்.
இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ... |
உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ... |
கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ... |
Leave a Reply
You must be logged in to post a comment.