நாடாளுமன்றத்தில் முதல் பிரச்னையாக தமிழக மீனவர் பிரச்னையை குறித்துப் பேசுவேன். நதி நீர் இணைப்பு குறித்து வலியுறுத்துவேன். இலங்கை தமிழர் நலன் மட்டும் அல்ல… உலக தமிழர்கள் பாதுகாப்பு குறித்தும் நாடாளுமன்றத்தில் பேசுவேன் என்று பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் வெற்றிபெற்ற பிறகு பொன்.ராதாகிருஷ்ணன் கோவையிலிருந்து விமானம் மூலம் சென்னைக்கு ஞாயிற்றுக் கிழமை வந்தார். விமான நிலையத்தில் பா.ஜ.க.,வினர் சார்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு தரப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
மக்களவைத் தேர்தலில் தேசியஅளவில் பாஜக திருப்பு முனையை ஏற்படுத்தி உள்ளது. 340 இடங்களில் வெற்றிபெற்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளோம்.
144 தடையை தேர்தல் ஆணையம் எதற்காக அமல்படுத்தியது என்று தெரியவில்லை. அது மிகப்பெரிய தவறு. அரசியல் கட்சிகள் தவறு செய்வதற்கு அது வழி வகுத்துவிட்டது.
இரவு 10 மணிக்கு மேல் வாக்குசேகரிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் கூறியதும் அரசியல் கட்சிகளுக்கு தவறுசெய்ய வாய்ப்பாக அமைந்து விட்டது. பாஜக கூட்டணி கட்சிகள் தோல்விக்கு தேர்தல் ஆணையத்தின் குளறுபடிகள் தான் காரணம்.
நாடாளுமன்றத்தில் முதல் பிரச்னையாக தமிழக மீனவர் பிரச்னையை குறித்துப் பேசுவேன். நதி நீர் இணைப்பு குறித்து வலியுறுத்துவேன். இலங்கை தமிழர் நலன் மட்டும் அல்ல… உலக தமிழர்கள் பாதுகாப்பு குறித்தும் நாடாளுமன்றத்தில் பேசுவேன் என்றார் அவர்.
உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ... |
இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ... |
வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.