நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்கும் நாள் மே 20-க்கு பிறகு முடிவுசெய்யப்படும் என்று பாஜக தேசிய தலைவர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.
பாஜக ஆட்சிமன்ற குழுக்கூட்டம் டெல்லியில் உள்ள கட்சி தலைமையகத்தில் சனிக் கிழமை நடைபெற்றது. ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த இந்தக்கூட்டத்தில் நரேந்திர மோடி, எல்கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சுஷ்மா ஸ்வராஜ், நிதின்கட்கரி உள்பட கட்சியின் மூத்த தலைவர்கள் 12 பேர் கலந்துகொண்டனர். மக்களவை தேர்தலில் பா.ஜ.க வெற்றிக்கு காரணமான நரேந்திரமோடிக்கு ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள் பாராட்டுத் தெரிவித்தனர். அத்வானியும், மோடியை கட்டித் தழுவி பாராட்டினார்.
இந்தக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்நாத்சிங், பா.ஜ.க.,வின் எம்பிக்கள் கூட்டம் நாளை நடக்க உள்ளது. அதில் மோடி தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார். அதேநாளில் தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்பி.க்கள் கூட்டம் நடைபெறும். இதன்பிறகு மோடியின் பதவி ஏற்பு விழா தேதி குறித்து முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
நாளை மோடி பிரதமராக பதவியேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து பா.ஜ.க.,வின் தேசியவட்டாரம் கூறுகையில், மே 21ம்தேதி முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாள் என்பதால் அரசியல் நாகரிகம் கருதி அந்த தேதி கைவிடப் பட்டது என்றனர்.
காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ... |
சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.