பீகார் சட்ட சபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஐக்கிய ஜனதா தளம் அரசு வெற்றிபெற்றது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பீகார் மாநிலத்தில் பாஜக 22 இடங்களைக் கைப்பற்றியது. லாலுபிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் 4 இடங்களையும், ஜக்கிய ஜனதா தளம் மற்றும்
காங்கிரஸ் கட்சி தலா இரண்டு இடங்களையும் கைப்பற்றின. தேர்தலில் ஏற்பட்டதோல்வியை அடுத்து, முதலமைச்சர் பதவியில் இருந்து நிதிஷ் குமார் விலகினார்.
பின்னர், அவரது ஆதரவுடன் ஜித்தன்ராம் மஞ்ஜியை முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். ஜித்தன் ராம் மஞ்ஜியின் தலைமையிலான ஐக்கிய ஜனதாதள அரசுக்கு, ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கும் என லாலு பிரசாத் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து ஐக்கிய ஜனதா தளம் கட்சி சார்பில், பீகார் சட்டப் பேரவையில், இன்று நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி ஆதரவளித்தது. இந்த வாக்கெடுப்பில் பாரதிய ஜனதா கட்சி வெளிநடப்புசெய்தது. பீகார் சட்டப்பேரவையில் 237 உறுப்பினர்களில் 117 பேர் ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்தவர்கள். பா.ஜ.க.,வுக்கு 88 உறுப்பினர்களும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிக்கு 21 உறுப்பினர்களும் உள்ளனர். இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஐக்கிய ஜனதா தளம் அரசு வெற்றிபெற்றது.
கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ... |
ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.