நாட்டின் 15வது பிரதமராக நரேந்திரமோடி பதவியேற்றார். கடவுள்பெயரால் அவர் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். அவருக்கு ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி பதவிப் பிரமாணமும் ரகசியகாப்புப் பிரமாணமும் செய்துவைத்தார்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் திறந்தவெளி அரங்கில் மாலை 6 மணிக்கு பதவியேற்புவிழா நடைபெற்றது. மோடி பதவியேற்பு விழா நடைபெற்ற குடியரசுத் தலைவர் மாளிகையைச்சுற்றி பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது 16வது லோக் சபா தேர்தலில் நரேந்திர மோடியின் தலைமையிலான பாஜக கூட்டணி வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதனையடுத்து லோக் சபா பாஜக தலைவராக(பிரதமர்) மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மோடி பிரதமராக பதவி ஏற்கும் விழா இன்று (திங்கட்கிழமை) டெல்லி ஜனாதிபதி மாளிகையில் மாலை 6 மணிக்கு நடைபெற்றது. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, நரேந்திர மோடிக்கு பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்பு பிரமாணமும் செய்துவைத்தார் கடவுள் பெயரால் அவர் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார்.
இதனையொட்டி குடியரசுத் தலைவர் மாளிகையின் திறந்தவெளி முற்றத்தில் 4000 பேர் அமர்ந்து பதவி யேற்பு நிகழ்வை காணும்வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஒரேநேரத்தில் முக்கிய பிரமுகர்கள் கூடியதால் தலைநகர் டெல்லி பலத்தபாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டிருந்தது. 25,000 போலீஸார், துணை ராணுவ படையினர் பாதுகாப்புபணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ... |
சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ... |
தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.