ராணுவத் தளவாடங்களை உற்பத்திசெய்யும் பாதுகாப்பு துறையில் அன்னிய நேரடி முதலீட்டு உச்சவரம்பை 100 சதவீதமாக உயர்த்துவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்கத் தொடங்கியுள்ளது. இதுகுறித்து அமைச்சகங்கள் இடையே ஆலோசனை நடத்துவதற்கான மத்திய அமைச்சரவை குறிப்பை மத்தியத்தொழில் துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை சுற்றுக்கு விட்டுள்ளது.
பாதுகாப்புத் துறையில் தற்போது 26 சதவீத அன்னியநேரடி முதலீட்டுக்கே அனுமதி அளிக்கப்படுகிறது.இதுதொடர்பாக மத்தியத்தொழில் துறை அமைச்சகம், 15 பக்கம்கொண்ட மத்திய அமைச்சரவை குறிப்பை வெள்ளிக்கிழமை சுற்றறிக்கையாக வெளியிட்டுள்ளது. அதில், பாதுகாப்புத்துறையில் அன்னிய நேரடி முதலீட்டை 100 சதவீதமாக உயர்த்துவது குறித்து அமைச்சகங்கள் இடையே ஆலோசனை நடத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
“நாட்டுக்கு நல்லது’: இதுதொடர்பாக மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு அவர் அளித்த பதில், “”பாதுகாப்பு துறையில் நேரடி அன்னிய முதலீட்டு வரம்பை அதிகரிப்பது, ராணுவ தளவாடங்கள் உற்பத்தியில் தன்னிறைவு பெறுவதற்கும், உள்நாட்டில் வேலை வாய்ப்பு அதிகரிப்பதற்கும் வழிவகுக்கும். பாதுகாப்பு துறைக்கான நிலைக்குழுவின் உறுப்பினராகச் செயல்பட்டுள்ள அனுபவத்தின் அடிப்படையில், தற்போது வெளி நாடுகளில் இருந்து 100 சதவீதம் ராணுவத் தளவாடங்களை இறக்குமதி செய்து வரும் நிலைமாறி, உள்நாட்டிலேயே அவற்றைத் தயாரிக்கத் தொடங்குவது நாட்டுக்கு நன்மையளிக்கும் என்று என்னால் உறுதியாகச் சொல்லமுடியும்.
ஆயுதங்கள் உள்ளிட்ட அதிநவீன ராணுவத் தளவாடங்களை உள்நாட்டிலேயே உற்பத்திசெய்ய வேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறது. அதற்குத்தேவையான அனைத்து அம்சங்களும் பரிசீலிக்கப்படும். ஆயுத உற்பத்தியில் நம் நாடு, நவீனமயமாவதோடு சுயச் சார்பு கொண்டதாகவும் ஆவதை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளோம்.
அதேநேரத்தில், பாதுகாப்புத் துறையில் அன்னியநேரடி முதலீட்டு உச்சவரம்பை 100 சதவீதமாக உயர்த்த வேண்டுமா என்பது குறித்து உடனடியாக முடிவெடுத்துவிட முடியாது. இதில் சில முடிவுகளை வர்த்தகத்துறை அமைச்சகமும், வேறு சில முடிவுகளை மத்திய அமைச்சரவையும் எடுக்க வேண்டியுள்ளது” என்று கூறினார்.
இதனிடையே, பாதுகாப்பு துறையில் அன்னியநேரடி முதலீட்டு உச்சவரம்பை 100 சதவீதமாக உயர்த்தும் நடவடிக்கை அவசியமானது என்று ஆர்எஸ்எஸ். அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது.
இது பற்றி ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இணைப் பொதுச்செயலாளர் கிருஷ்ண கோபால் கூறுகையில், போர் விமானத்தில் இருந்து நீர்மூழ்கிக்கப்பல் வரை அனைத்து ராணுவ தளவாடங்களை பொருத்தமட்டில், இந்தியா இறக்குமதியையே சார்ந்துள்ளது. இது போல் ராணுவத்தேவைக்கு இறக்குமதியைச் சார்ந்திருப்பது நல்லதல்ல. ஆகையால் அவற்றை உள்நாட்டிலேயே தயாரிப்பதற்கான முயற்சி நியாயமானதே” என்றார்.
மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ... |
எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.