"ஏதோ நட்பா கூப்பிடுறாரேன்னு போனேன். ஆனா முன்னாடி இருந்தவங்களையெல்லாம் விட இவரு படு மோசம். இங்கிலீஷும் தெரியலை. நான் தான் ஹிந்தி கத்துக்கணும் போல. முதல் சந்திப்பிலேயே இப்படி கடுமையா நடந்தாருன்னா அடுத்த ஒரு வருஷத்திலே ஒட்டு மொத்தமா நம்மளை காலி பண்ணிடுவாரு போலருக்கே.
இந்தியன் ஒருத்தனையும் நம்பக்கூடாதுய்யா" – இப்படி புலம்பிக் கொண்டிருக்கிறாராம் இலங்கை அதிபர் ராஜபக்ஷே. பிரதமர் மோடியின் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு இலங்கை திரும்பியதிலிருந்து இப்படித்தான் புலம்பலாம். இலங்கையிலிருந்து செயல்படும் 'Lanka News web' என்ற இணைய தளம் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.
பொதுவாக இலங்கை அரசு சார்புடைய அனைத்துச் செய்திகளையும் தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் வெளியிடும் இணைய தளம் அது. இந்தியாவிலிருந்து திரும்பியதிலிருந்தே ராஜபக்ஷே கடும் கோபத்தில் இருப்பதாகவும், அவரது அமைச்சரவை சகாக்களோ, பணியாளர்களோ யாருமே அவரை நெருங்க பயப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இலங்கை அமைச்சரான விமல சிறிபால டி சில்வா, "இந்தியவில் புதிதாக வந்துள்ள பாரதிய ஜனதா அரசால் இலங்கை அரசுக்கு பிரச்சனைகள் உருவாகியிருப்பதாக இலங்கையைச் சேர்ந்த சில ஊடகங்கள் செய்திகள் வெளியிடுகின்றன. முந்தைய காங்கிரஸ் அரசை கையாண்டதைப் போல இலங்கை அரசு இப்போது செயல்பட முடியாது என்றும் அவை சொல்கின்றன. இன்னும் சில ஊடகங்களோ ராஜபக்சேவின் அரசாங்கமே இல்லாமல் போய்விடும் என்கின்றன. ஆனால் இலங்கை அதிபருக்கும் இந்திய பிரதமருக்கும் இடையேயான முதலாவது சந்திப்பு வெற்றிகரமாக இருந்தது. இருநாட்டு நல்லுறவை வலுப்படுத்துவதாக அமைந்தது. இலங்கையின் நிலைப்பாட்டை இந்திய பிரதமர் மோடியிடம் ராஜபக்சே விளக்கினார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்ததையும் காதுகொடுத்து கேட்டுக் கொண்டார். எங்களைப் பொறுத்தவரையில் பிரச்சனைகளுக்கு பேச்சுகள் மூலம் தீர்வு காண விரும்புகிறோமே தவிர முரண்பட்ட அரசியல் நிலைப்பாடுகள் மூலம் அல்ல. " என்று கூறியிருக்கிறார்.
இந்தியாவிலிருந்து திரும்பிச் சென்றவுடன் ஒரு நாள் முழுவதும் ராஜபக்சே யாரையும் சந்திக்கவில்லையாம். அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன என்றும் கூறப்படுகிறது.
உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ... |
ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ... |
சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.