மக்களவை எதிர் கட்சி தலைவர் பதவி ஜூன் 4க்கு முன்பாக முடிவு செய்யப்படும்

 மக்களவை எதிர் கட்சி தலைவர் பதவியை யாருக்கு அளிப்பது என்பதுகுறித்து நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கும் ஜூன் 4க்கு முன்பாக முடிவு செய்யப்படும் என நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் பிரகாஷ்ஜாவேத்கர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட படு தோல்வி காரணமாக மக்களவையில் காங்கிரஸ்க்கு 44 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். எதிர்கட்சி அந்தஸ்து பெறுவதற்கு தேவையான குறைந்த பட்ச 55 உறுப்பினர்கள் எண்ணிக்கை எந்தகட்சிக்கும் இல்லாத காரணத்தால் அந்தபதவி யாருக்காவது வழங்கப்படுமா அல்லது ராஜிவ் காந்தி பிரதமராக பதவியேற்ற காலகட்டத்தில் யாருக்கும் வழங்கப்படாததுபோல் காலியாக இருக்குமா என்ற கேள்விக் குறி எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் காங்கிரசைபோல் அல்லாமல் பெருந்தன்மையாக நடந்து கொள்வோம் என நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.

இருப்பினும் மக்களவை எதிர்கட்சி தலைவர் விவகாரம்குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை என சில தினங்களுக்கு முன்பு அறிவித்தார். இந்நிலையில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் வரும் 4ம் தேதி தொடங்க இருக்கிறது. இந்த கூட்டதொடரில் சபாநாயகர் தேர்வு செய்யப்பட இருக்கிறார். சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டவரை பிரதமரும், எதிர்கட்சி தலைவரும் அவர் இருக்கையில் அழைத்துசென்று அமர வைப்பது மரபு. இது குறித்து நாடாளுன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சராக நேற்று பொறுப்பு ஏற்றுக்கொண்ட பிரகாஷ் ஜாவேத்கரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஜூன் 4க்கு முன்பாக எதிர்கட்சி தலைவர்பதவி குறித்து முடிவு எடுக்கப்படும் என ஜாவேத்கர் தெரிவித்தார். அநேகமாக காங்கிரஸ் கட்சிக்கே எதிர் கட்சி தலைவர் பதவி வழங்கப்படும் என டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன. நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள பிரகாஷ் ஜாவேத்கருக்கு மாநிலங்கள் அவை பொறுப்பை வெங்கய்யா நாயுடு ஒதுக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

காட்டாமணக்கு இலையின் மருத்துவக் குணம்

இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ...

ஆண்மையை அதிகமாக்கும் வழிகள்

அரைக்கீரை 100 கிராம் –மிளகு 10 கிராம், கொத்தமல்லி இலை 50 கிராம், ...

முயற்சியின் அளவே தியானம்

சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ...