இந்திய மீனவர்களை சுட்டுக்கொன்ற இத்தாலி கடற்படை வீரர்கள் மீதான கொலைவழக்கில் தலையிட முடியாது என அந்நாட்டு வெளியுறவு அமைச்சரிடம் மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.
கன்னியாகுமரி பகுதியை சேர்ந்த மீனவர்கள் இரண்டுபேர் கடந்த 2012ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கேரள கடல்பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த போது, அந்த வழியாக சென்ற என்ரிக்கா லெக்சி என்ற இத்தாலி சரக்கு கப்பல் பாதுகாப்பு வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக இத்தாலி கடற்படையை சேர்ந்த மாசிமிலானோ லத்தோர், சல்வதோர் ஜிரோன் ஆகிய இருவரை கேரள போலீஸ் கைதுசெய்தது. பின்னர், சுப்ரீம் கோர்ட் உத்தரவின் பேரில் இந்தவழக்கு தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டது. தங்கள் மீதான வழக்கை விசாரிக்க தேசிய புலனாய்வு அமைப்புக்கு அதிகாரம் இல்லை என இத்தாலி வீரர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இதற்கிடையில் இந்தவழக்கை இத்தாலிக்கு மாற்றவேண்டும் அல்லது நடுநிலையான வேறு நாட்டுக்கு மாற்ற வேண்டும் என இத்தாலி அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப் போவதாகவும் அறிவித்தது. இந்நிலையில் வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு இத்தாலி வெளியுறவு அமைச்சர் பெட்ரிக்கா மொஹரினி நேற்று தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார். இதைதொடர்ந்து சுமார் 20 நிமிடம் இரண்டு தலைவர்களும் பேசிக் கொண்டனர். இத்தாலி வீரர்களின் எதிர் காலம் குறித்து கவலை தெரிவித்த மொஹரினி, இந்த வழக்கில் மத்திய அரசு தலையிடவேண்டும் என கோரிக்கை விடுத்தார். வழக்கு தற்போது நிலுவையில் உள்ளதால் இந்த நிலையில் மத்திய அரசு தலையிட முடியாது சுஷ்மா சுவராஜ் திட்டவட்டமாக அவரிடம் தெரிவித்து விட்டார்.
அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ... |
மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ... |
கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.