சாலை பாதுகாப்பு விதி முறைகள் கடுமை ஆக்கப்பட்டும்

 மத்திய மந்திரி கோபிநாத் முண்டே, கடந்த 3ந் தேதி கார்விபத்தில் மரணம் அடைந்தார். அவரது இலாகா பொறுப்புகள், மத்திய சாலை போக்கு வரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் துறை மந்திரி நிதின் கட்காரியிடம் கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், சாலைபாதுகாப்பு குறித்து நிதின் கட்காரி ஆய்வுகூட்டம் நடத்தினார். அதன்பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

சாலை பாதுகாப்பு விதி முறைகள் கடுமை ஆக்கப்பட்டுள்ளன. அதில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. மோட்டார் வாகன சட்டங்களின் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கி, புதியமசோதா ஒன்று தயாராகி வருகிறது. அது, சர்வதேசதரத்துக்கு ஏற்ப அமையும். அந்தவரைவு மசோதா, இன்னும் ஒருமாதத்துக்குள் தயாராகி விடும். ஒரு மாதத்தில் நடைபெற உள்ள தேசிய சாலைபாதுகாப்பு கவுன்சில் மாநாட்டில் அம்மசோதா விவாதத்துக்கு வைக்கப்படும். பிரதமர் நரேந்திர மோடியும் மாநாட்டுக்கு அழைக்கப்படுவார். அனைத்து தரப்பினரின் யோசனைகளும் மசோதாவில் சேர்க்கப்படும். அந்த கடுமையான சட்டம் அமலுக்கு வந்துவிட்டால், சாலை விபத்து மரணங்கள் குறைந்துவிடும்.

ஒருவர் போக்குவரத்து விதிகளை 3 தடவைக்குமேல் மீறினால், அவரது ஓட்டுனர் உரிமம் 6 மாதங்களுக்கு நீக்கி வைக்கப்படும். அதன் பிறகும் விதி மீறலில் ஈடுபட்டால், உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும். இவையெல்லாம், புதிய மசோதாவில் சேர்க்க பரிசீலிக்கப்படுகின்றன. அனைத்து சிக்னல்களிலும் கண் காணிப்பு கேமரா பொருத்துவதும் புதிய மசோதாவில் இடம்பெற உள்ளது. அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, சிங்கப்பூர் போன்ற முன்னேறிய நாடுகளில் உள்ள அம்சங்கள், மசோதாவில் இடம்பெறும். இதற்காக, ஓரிருநாளில் இங்கிலாந்து தூதரை சந்திக்கப்போகிறேன். இவ்வாறு நிதின் கட்காரி கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை நோய் குணமாக

முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ...

வாய் துர்நாற்றம் நீங்க

ஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே வந்துவிடும் . ...

முசுமுசுக்கையின் மருத்துவக் குணம்

வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ...