இந்து முன்னணித் தலைவர் கொலை செய்யப் பட்டதின் எதிரொலியாக, இந்து இயக்கத் தலைவர்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்தாண்டு அடுத்தடுத்து இந்து இயக்க தலைவர்கள் கொலைசெய்யப்பட்டனர். குறிப்பாக வேலூரில் இந்துமுன்னணி மாநில நிர்வாகி வெள்ளையப்பன் கடந்த ஜூலை 1ம் தேதி கொலை செய்யப்பட்டார்.
ஜூலை 19ல் சேலத்தில் பாஜக நிர்வாகி ஆடிட்டர் ரமேஷ் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது போன்று ஒரே ஆண்டில் இந்து இயக்கங்களை சேர்ந்த 4பேர் கொலை செய்யப் பட்டனர்.
இதை தொடர்ந்து தமிழகத்தில் முக்கியமான இந்து இயக்க தலைவர்கள் சுமார் 82 பேருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. முக்கிய தலைவர்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கவும்பட்டது.
பின்பு அக்டோபர் 5ம் தேதி ஆந்திரமாநிலம் புத்தூரில் பதுங்கியிருந்த தீவிரவாதி போலீஸ் பக்ருதீன் தலைமையிலான கும்பலை போலீஸார் கைதுசெய்தனர். இதனால் முக்கியமான தலைவர்களை தவிர்த்து பிற தலைவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு விலக்கிகொள்ளப்பட்டது.
இந்நிலையில் திருவள்ளூர் மாவட்ட இந்துமுன்னணி தலைவர் சுரேஷ் குமார் சென்னை அம்பத்தூர் தொழிற் பேட்டையில் புதன்கிழமை இரவு வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம், இந்து தலைவர்களிடம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் என்ன காரணத்துக்காக கொலைசெய்யப்பட்டார் என்ற விவரம் இன்னும் அறியப்படவில்லை.
இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்து இயக்கங்களை சேர்ந்த முக்கிய தலைவர்களுக்கு காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தவிர, அச்சுறுத்தலில் உள்ள இந்து இயக்க தலைவர்களின் பட்டியலையும் காவல் துறை தயாரித்துவருகிறது. இந்த பட்டியல் தயார்செய்யப்பட்ட பின்னர், தேவைப்படும் பட்சத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்படும் என காவல்துறை உயர் அதிகாரி தெரிவித்தார்.
சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ... |
பன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.