இதுவே இந்த அரசின் கடைசி ரயில்கட்டண உயர்வாக இருக்கட்டும்

 இதுவே இந்த அரசின் கடைசி ரயில்கட்டண உயர்வாக இருக்கட்டும் என சிவ சேனை கருத்து தெரிவித்துள்ளது. பா.ஜ.க.,வின் கூட்டணி கட்சியான சிவ சேனையின் ஆதிகாரப்பூர்வ பத்திரிகை சாம்னா, ரயில்கட்டண உயர்வு குறித்து கூறியிருப்பதாவது :

ரயில்வே பயணிகள் மற்றும் சரக்கு ரயில்சேவை கட்டணத்தில் விலை உயர்வு மும்பை வாசிகளை மிகபெரிய நெருக்கடிக்கு தள்ளிவிடும். மேலும், இதன்படி மாதாந்திர மற்றும் காலாண்டு சீசன் டிக்கெட்டுகள் இரட்டிப்பாக உயரும்.

ஆனால், ரயில்வேத்துறை ரூ.28000 கோடி நஷ்டத்தில் செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விலை உயர்வின் மூலம் இந்த நஷ்டம் ஈடுசெய்ய முடியும் என்று அந்த துறை கூறியுள்ளது. இது இந்த விலை உயர்வை சற்று நியாயப்படுத்துவதாக இருந்தாலும், இதனை வேறுவழியின்றி மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒன்றாக உள்ளது.

நாள் ஒன்றுக்கு லட்சக் கணக்கான மக்கள் பயணிக்கும் இந்த ரயிலில், பாதுகாப்பு மற்றும் வசதியை ஏற்படுத்த இந்த விலைஉயர்வு உதவிடும் என்று கூறப்பட்டாலும், மக்களும் எதிர்க் கட்சியினரும் இதனை ஏற்க கூடிய நிலையில் இல்லை.

ஐரோப்பா, ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை இந்தியாவுடன் ஒப்பிடுகையில், நமது ரயில்வே மிகவும் பின் தங்கிய நிலையிலும் மோசமான நிலையிலுமே உள்ளது. பயணிகளின் எண்ணிக்கையால் கூட்டநெரிசல் உயர்ந்தாலும், வெகுகுறைவான அளவிலே புதியசேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த 15-20 ஆண்டுகளில், இருந்த அனைத்து ரயில்வே அமைச்சர்களும் இந்ததுறையை சூறையாடி உள்ளனர். முக்கியமாக பிஹாரிலிருந்து வந்த முன்னாள் ரயில்வே அமைச்சர் மக்களுக்கானவராக செயல்படுவது போன்ற தோரணையை உருவாக்கினார் .

காங்கிரஸால் தேர்வு செய்யப்பட்ட பன்சாலின் உறவினர், ரயில்வே ஒப்பந்தங்களில் மிகப்பெரிய மோசடி செய்ததாக கையும் களவுமாக பிடிப்பட்டார். இதுபோன்ற முறைகேடுகள் தான், ரயில்வேயில் மிகபெரிய விபத்துகளும், அப்பாவி பயணிகளின் உயிரிழப்புக்கும் காரணமாகும்.

மக்களுக்கு வசதியை ஏற்படுத்தி கொடுத்தால், அதற்கான கட்டணத்தைசெலுத்த அவர்கள் தயாராக உள்ளனர் . ஆனால் அரசியல்வாதிகளின் வளம்பெற, அவர்கள் கூடுதல் கட்டணத்தை செலுத்த ஒரு போதும் விரும்ப மாட்டார்கள்.

இதேவிலை உயர்வை முந்தைய காங்கிரஸ் ஆட்சியாளர்கள் கொண்டுவந்திருந்தால், எதிர்கட்சியாக இருந்த நாங்கள் இதனை கடுமையாக எதிர்த்திருப்போம். ஆனால் தற்போது பாஜக கொண்டுவந்துள்ள கட்டண விலை உயர்வு, மக்களின் அத்தியாவசிய மற்றும் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக கொண்டு வரப்பட்டுள்ளது.

மக்கள் இந்த கட்டண விலை உயர்வை கடுமையாக கண்டிக்கின்றனர். இருப்பினும், இதுவே இந்த ஆட்சியின் கடைசி விலை உயர்வாக இருக்கட்டும். மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படட்டும் என சாம்னா தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

காரட்டின் மருத்துவ குணம்

காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ...

எலும்பு நைவு (OSTEOPOROSIS)

உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ...

மாதுளையின் மருத்துவ குணம்

புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ...