நக்ஸல், மாவோயிஸ்ட்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படாது என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.
தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள், மாநில உயர் போலீஸ் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பிஹார், ஒடிஷா, மேற்குவங்கம், மத்தியப்பிரதேசம், உத்தர பிரதேசம், மகாராஷ்டிரம், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள், காவல்துறை தலைவர்கள், சி.ஆர்.பி.எப்., பி.எஸ்.எப். உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதில் பேசிய அமைச்சர் ராஜ்நாத்சிங் நக்ஸல், மாவோயிஸ்ட் தீவிரவாதத்தை ஒழிக்க அனைத்து மாநிலங்களிலும் ஒரே மாதிரியான அணுகு முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
மாநில அரசுகளின் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு தரும் . காவல் துறையினருக்கு நவீன ஆயுதங்கள் வழங்கப்படும் .சத்தீஸ்கர், ஒடிஷா, ஜார்க்கண்ட், பிஹார் மாநிலங்களில் நக்ஸல் எதிர்ப்பு சிறப்புப்படை உருவாக்கப்படும். ஆந்திரப் பிரதேசத்திலும் இந்தப்படை விரைவில் அமைக்கப்படும். இதற்கு தேவையான நிதியை மத்திய அரசு வழங்கும்.
நக்ஸல், மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படாது. அவர்கள் தாக்குதல் நடத்தினால் பாதுகாப்பு படையினர் தக்கபதிலடி கொடுப்பார்கள். நக்ஸல்களை எதிர்கொள்ளும் வகையில் காவல் துறை நவீனப்படுத்தப்படும். இதற்கான நிதியுதவி, நவீன ஆயுதங்களை மத்திய அரசுவழங்கும்.
காவல் துறையிடம் சரண் அடையும் நக்ஸல் தீவிரவாதிகளுக்கு தக்கசன்மானம் வழங்கப்படும். அவர்களின் மறுவாழ்வுக்கு ஏற்பாடுசெய்து தரப்படும். ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் பணியாற்றும் வீரர்களுக்கு இணையாக இதரப் பகுதிகளில் பணியாற்றும் வீரர்களுக்கும் சலுகைகள் வழங்கப்படும்.என்று அவர் தெரிவித்தார்.
அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ... |
நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ... |
அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.