கச்சத் தீவு பிரச்னையில் மறு ஆய்வு செய்ய வேண்டும்

 கச்சத் தீவு பிரச்னையில் மறு ஆய்வு செய்ய வேண்டும் கச்சத்தீவு தொடர்பான வழக்கில் சிலநாள்களுக்கு முன்பு மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனு, முந்தைய காங்கிரஸ் அரசால் தயாரிக்கப்பட்டது என்று பாஜக தேசியப் பொதுச்செயலாளரும், தமிழகப் பொறுப்பாளருமான முரளிதரராவ் தெரிவித்துள்ளார்

பாஜக மாநிலத் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் கட்சியின் மாவட்ட தலைவர்கள் கூட்டம் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

பாஜக மாவட்ட தலைவர்கள் மற்றும் மாநிலநிர்வாகிகள் கூட்டத்தில், தமிழகத்தில் கட்சியைப் பலப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர்வரை குஜராத் முதல் அருணாச்சலப் பிரதேசம் வரை நாடுமுழுவதும் பாஜக வெற்றி பெற்றுள்ளது.

இந்த வெற்றியை தக்கவைக்க வேண்டிய மிகப்பெரிய சவால் எங்கள் முன் உள்ளது. மிகப்பெரிய மாநிலங்களில் ஒன்றான தமிழகத்தில் பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது. இதனை பயன்படுத்தி மாநிலம்முழுவதும் கட்சியை பலப்படுத்துவதற்கான பல்வேறு திட்டங்களை மாவட்ட தலைவர்களும், மாநில நிர்வாகிகளும் முன்வைத்துள்ளனர்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் கச்சத்தீவு தொடர்பான வழக்கில் சிலநாள்களுக்கு முன்பு மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனு, முந்தைய காங்கிரஸ் அரசால் தயாரிக்கப்பட்டது. அதற்கும் பாஜகவுக்கும் தொடர்பில்லை.

கச்சத்தீவு, இந்திய இறையாண்மைக்கு உள்பட்ட பகுதியா? என்பது குறித்தும் மத்திய அரசு மறு ஆய்வுசெய்ய வேண்டும் என்பதே பாஜக.,வின் கோரிக்கை. கச்சத்தீவு மட்டுமல்ல பல்வேறு பிரச்னைகளை இந்திய மீனவர்கள் சந்தித்து வருகின்றனர்.

இந்திய மீனவர்களின் பிரச்னைகளை தீர்க்கவும், அவர்களின் மீன்பிடி உரிமையை பாதுகாக்கவும் மத்திய அரசும், பாஜகவும் உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும்.

விலைவாசியை குறைக்கமுடியாது: கடந்த 10 ஆண்டுகால காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் சீர்குலைக்கப் பட்டுள்ளது. பணவீக்கம் அதிகரித்து வருகிறது. மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் நரேந்திரமோடி ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளார்.

இராக்கில் ஏற்பட்டுள்ள உள்நாட்டுப்போரும், பருவமழை தாமதத்தால் விவசாயப் பொருள்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதும் பொருளாதார நெருக்கடியை மேலும் அதிகரிக்க செய்துள்ளது.

இந்த நெருக்கடி நிலையை சமாளிக்கவே பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையும், ரயில் கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆட்சிக்குவந்த 30 நாள்களில் அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வுகாண முடியாது. பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், விலைவாசியைக் குறைக்கவும் போதுமான கால அவகாசம்தேவை என்றார் முரளிதரராவ்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

ஆகாச கருடன் கிழங்கு

கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ...

மஞ்சளின் மருத்துவக் குணம்

பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ...

தொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ...