பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மோடி அரசின் 2014-2015 முதல் ரயில்வே பட்ஜெட்டை ரயில்வேதுறை அமைச்சர் சதானந்தா கவுடா தாக்கல் செய்தார் . இந்திய ரயில்வே சந்திக்கும் சவால்களுக்கு தீர்வு உள்ளது , 12 ஆயிரத்து 500 ரயில்களை இந்திய ரயில்வே இயக்கிவருகிறது. மேலும் நாள்
ஒன்றுக்கு 2 கோடியே 30 லட்சம் பயணிகள் ரயிலை பயன் படுத்துகின்றனர். நாள் ஒன்றுக்கு 30 லட்சம் சரக்குகளை கையாண்டு வருகிறது. சென்ற ஆண்டு இந்திய ரயில்வேயின் வருவாய் 1 லட்சத்து 39 ஆயிரம்கோடி , சென்ற ஆண்டு ரயில்வேயின் நடைமுறை செலவு 1 லட்சத்து 30 ஆயிரம் கோடி . 6 சதவீத உபரியை கொண்டு ரயில்வே வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த முடியாது என்று ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா மக்களவையில் உரையாற்றினார்.
மேலும் மத்திய ரயில்வே பட்ஜெட்டின் முக்கிய அம்சம் ;
* புதிய திட்டங்கள் அறிவிப்பதை விட அறிவிக்கப்பட்ட திட்டங்களை நிறைவேற்றுவதே சாலச்சிறந்தது.
* என் மீது நம்பிக்கை வைத்து பெரிய பொறுப்பைக் கொடுத்துள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்த நேரத்தில் நான் நன்றி செலுத்துகிறேன்.
* இந்திய மக்களுக்கு சேவை செய்வதற்காக எனக்குக் கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பை நான் நன்றாக நிறைவேற்றுவேன்.
* இந்தியப் பொருளாதாரத்தின் ஆன்மாவாகத் திகழ்வது, இந்திய ரயில்வேதான்.
* புதிய ரயில்கள் குறித்த பல்வேறு கோரிக்கைகளால் நான் உண்மையில் திணறிப் போயுள்ளேன்.
* உலகின் மிகப் பெரிய சரக்குப் போக்குவரத்தாக இந்திய ரயில்வேயை மாற்றுவது நமது குறிக்கோளாக இருக்கும்.
* சமூக மற்றும் பொருளாதார வேண்டுகோள்களை சமன் செய்யும் விதமாக அமைய வேண்டும் என்று விரும்புகிறேன்.
* இப்போதும் 30 வருடங்களைக் கடந்தும் முடிவு பெறாமல் இழுத்துக் கொண்டிருக்கும் 4 முக்கிய திட்டங்கள் இருக்கின்றன.
* அந்தத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதில்தான் கவனம் செலுத்தப்பட்டுள்ளதே தவிர அவற்றை முடித்துவிட முயற்சி எடுக்கப்படவில்லை.
* ரயில்வேத் துறையை பராமரிப்பதற்கும் சரியாகக் கையாள்வதற்குமே வருவாயில் 96% செலவு செய்யப்பட்டுவிடுகிறது. இதில் மீதமுள்ள 6% மட்டுமே மீதமுள்ளது.
* எனவே, இதற்கான மருந்தாக நாம் மேற்கொள்ளும் முயற்சிகள் துவக்கத்தில் கசப்பானவையாகத்தான் இருக்கும், ஆனால் முடிவு அமிர்தமாக இருக்கும்.
* ரயில்வேயின் நிலையை மேலும் உயர்த்துவதற்கு, தனியார் மற்றும் பொதுமக்கள் கூட்டுப் பங்களிப்பு தேவை.
* ரயில்வேத் துறை அமைச்சகம், ரயில்வேத் துறையில் நேரடி அன்னிய முதலீட்டுக்கான மத்திய அமைச்சரவையின் ஒப்புதலை எதிர்பாக்கிறது. இது ரயில்வே போக்குவரத்து தவிர்த்த மற்ற துறைகளில்!
* அடுத்த பத்து வருடங்களுக்குத் தேவையானவற்றை சரிக்கட்ட ஒவ்வொரு வருடமும் ரூ.50 ஆயிரம் கோடி ரயில்வேக்கு தேவைப்படுகிறது.
* உபரி வருவாய் இருப்பு குறைந்து கொண்டே வருகிறது. இது வளர்ச்சித் திட்டங்களுக்கு பெரும் முட்டுக்கட்டையாக உள்ளது
* கடந்த 2013-14ம் நிதியாண்டில், மொத்த போக்குவரத்து வருவாய் ரூ.12,35,558 கோடியாக இருந்தது, 94% என்ற விகிதத்தில் இருந்தது.
* தற்போது உபரி வருவாய் குறைந்துவிட்டதால், வரும் ஆண்டுகளில் ரூ.5 லட்சம் கோடி ரயில்வேயின் நிலுவைத்திட்டங்கள், தொடர்ந்து வரும் திட்டங்களுக்குத் தேவைப்படுகிறது. வளர்ச்சித் திட்டங்களுக்கான மூலவருவாய் கிடைப்பது மிகவும் குறைவாக உள்ளது.
* மூத்த குடிமக்களுக்கு வசதியாக, ரயில் நிலையங்களில் உள்ளே செல்வதற்கு பேட்டரி கார்கள் வசதி வழங்கப்பட வேண்டும் என்று விரும்புகிறேன்.
* பிரபல பிராண்டுகளின் முன் தயாரிப்பு உணவு வகைகள், தயார் நிலை உணவுகளை அறிமுகப்படுத்த வேண்டும் என்று நான் என் யோசனையை முன்வைக்கிறேன்.
* 50 ரயில் நிலையங்களில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ளவும், அதற்கான பணிகளை மேம்படுத்தவும் தனியார் துறை பங்களிப்பை அவுட்சோர்ஸிங் முறையில் வழங்க என் விருப்பத்தை முன்வைக்கிறேன்.
* * ரயில்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் ரயில் நிலையங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி வழங்கப்படும்.
* ரயில் நிலையங்களில் உள்ள தூய்மைப் படுத்தும் பணிகளைக் கண்காணிக்க சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்படும்/
* ரயில்களில் தரமற்ற உணவுகளை வழங்கும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களுக்கான ஒப்பந்தங்கள் முறிக்கப்படுவது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
* தபால் நிலையங்கள் மற்றும் மொபைல் போன்கள் மூலமான ரயில்வே டிக்கெட் புக்கிங், பிரபலப்படுத்தப் படும்.
* டிக்கெட் வழங்கும் மெஷின்கள் மூலம் நாணயங்களை இட்டு டிக்கெட் பெறும் தானியங்கி முறை பிரபலப்படுத்தப் படும்.
* பெண்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், 4000 பெண் போலீஸார் ஆர்பிஎஃப் ரயில்வே போலீஸ் பிரிவில் சேர்க்கப்படுவர்.
* மும்பை – ஆமதாபாத் இடையே புல்லட் ரயில் இயக்க திட்டம் முன்வைக்கப்படுகிறது.
* தேர்ந்தெடுக்கப்பட்ட வழித்தடங்களில் ரயில்களின் வேகம் மணிக்கு 160 கிலோ மீட்டரில் இருந்து 200 கி.மீட்டர் வரையில் அதிகரிக்க முயற்சி மேற்கொள்ளப்படும்.
* அனைத்து ரயில் நிலையங்களிலும் ஓய்வு அறைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* ஆளில்லா ரயில்வே கிராஸிங்குகளை நீக்க, ரூ.1,780 கோடி ஒதுக்கீடு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
* அனைத்து ஏ1 ரயில் நிலையங்களிலும் வைபி தொழில்நுட்பம் மூலம் இணைய இணைப்பு வழங்கப்படும்
* தெலங்கானா, ஆந்திரப் பிரதேசத்தில் 29 ரயில் திட்டங்கள் உள்ளன. அவை ரூ.20,680 கோடி செலவில் நிறைவேற்றப்படும்.
* ரயில்வேத் துறையில் பொறியியல் துறை பின்னணியில் வரும் இளம் புல மாணவர்களுக்கு கோடைகாலப் பயிற்சி வழங்கப்படும்.
பன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ... |
கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ... |
இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.