இந்திய ராணுவ தலைமை தளபதி பிக்ராம்சிங் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் மிக விரைவான முடிவெடுக்கும் தன்மை குறித்து வெகுவாக பாராட்டியுள்ளார். மத்திய பாதுகாப்புதுறை அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் நடந்த தேநீர்விருந்தில், பாதுகாப்பு செயலாளர் ஆர்கே. மாத்தூர் உட்பட அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இந்தகூட்டத்தில் ராணுவ தலைமை தளபதி பிக்ராம்சிங்கும் கலந்துகொண்டார். அவர் பேசும் போது, மத்திய அரசுடன் குறைந்தகால அளவே பணியாற்றியிருந்த போதிலும், அரசின் முடிவெடுக்கும் திறன் குறித்து ஈர்க்கப்பட்டு உள்ளேன் என்று தெரிவித்துள்ளார். மத்திய அரசு பதவியேற்ற குறைந்தகால கட்டத்தில், சீனாவுடனான எல்லை பகுதியில் சாலைகள் அமைப்பதற்கான சுற்றுச் சுழல் அனுமதி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை ஆயுதபடைக்காக நிறைவேற்றி உள்ளது.
நரேந்திர மோடி தலைமையிலான அரசு, பாதுகாப்பு தொடர்பான மந்திரிகுழுவின் முதல் கூட்டத்தில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடைமுறைப் படுத்தப்பட்டு உள்ள சர்ச்சைக்குரிய ஆயுதபடை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தில் மாற்றம் எதுவும் கொண்டுவராமல் இருக்க வேண்டும் என்ற ராணுவத்தின் அறிவுரையை ஏற்று கொண்டது என்றார்
நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ... |
Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ... |
தினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக குடிப்பது கொழுப்பைகரைத்திட ... |
Leave a Reply
You must be logged in to post a comment.