ஈராக்கில், பயங்கர வாதிகளின் பிடியில் உள்ளவர்கள் உட்பட, அனைத்து இந்தியர்களும், பத்திரமாக நாடுதிரும்புவது உறுதி செய்யப்படும்,” என்று வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
ஈராக்கின் மொசூல்நகரில், இந்தியர்கள், 41பேர், பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ளனர். இதுதொடர்பாக, ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த தியாகி, நேற்று, ராஜ்யசபாவில், கவன ஈர்ப்புதீர்மானம் கொண்டு வந்தார்.இதற்கு பதில் அளித்த, வெளியுறவு அமைச்சர் சுஷ்மாசுவராஜ் கூறியதாவது:ஈராக்கில் உள்நாட்டுப் போர் தீவிரம் அடைந்துள்ளதும், ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகளின் தாக்குதலால், அங்கு நிலைமை மோசமடைந்துவருவதும், மிகுந்த கவலை தருவதாக உள்ளது. இருப்பினும், ஈராக்கில் தற்போதுள்ள, ஒவ்வொரு இந்தியருக்கும் தேவையான உதவிகளை, மத்திய அரசு செய்துவருகிறது. அவர்கள் பத்திரமாக நாடுதிரும்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஈராக்கின் மொசூல் நகரில், பயங்கர வாதிகள் பிடியில் உள்ள, 41 பேர் உட்பட, அனைத்து இந்தியர்களும், பாதுகாப்பாக நாடுதிரும்புவதை, மத்திய அரசு உறுதிசெய்யும். அதற்காக, சாத்தியமான அனைத்து வழிகளிலும், முயற்சி மேற்கொள்ளப்படும்.ஈராக்கில் உள்நாட்டுப்போர் துவங்கியது முதல், அங்குள்ள நிலவரங்களை, மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. அத்துடன், ஈராக்செல்லும் இந்தியர்களுக்காக, அவ்வப்போது, எச்சரிக்கை அறிவிப்புகளும் வெளியிடப்படுகின்றன.
ஈராக்பயணத்தை தவிர்க்கும்படி, இந்தியர்கள் அனைவரையும், மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. ஈராக் செல்வோருக்கு, குடியேற்றத்துறை அனுமதி வழங்குவதையும், வெளிநாட்டு இந்தியர் விவகாரத்துறை நிறுத்தி வைத்துள்ளது.ஈராக்கில், இந்தியர்களில், ஒரு பிரிவினர் மட்டுமே, சண்டை நடக்கும் பகுதியில் சிக்கி உள்ளனர்.என்று , அவர் கூறினார்.
சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ... |
கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ... |
இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.