தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மோடி குறித்து தனது நாட்டு ராணுவ இணையதளத்தில் அவதூறாக கட்டுரை வெளியிடப்பட்டதற்காக இலங்கை அதிபர் ராஜபக்சே நேற்று வருத்தம் தெரிவித்தார்.
இலங்கை ராணுவத்தின் இணைய தளத்தில் சில தினங்களுக்கு முன், இலங்கை மீனவர்கள், கச்சத் தீவு உள்ளிட்ட பிரச்னைகள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா அடிக்கடி கடிதம் எழுதுவதை கொச்சைப்படுத்தி கட்டுரை வெளியிடப்பட்டது.
இதன் அருகே காதல் சின்னமும் வைக்கப்பட்டு இருந்தது. இதற்கு நாடுமுழுவதும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. நாடாளுமன்றத்தில் கடும் ஏற்ப்பட்டது . இதைத் தொடர்ந்து, தனது இணையதளத்தில் இருந்து சர்ச்சைக்குரிய கட்டுரை, படத்தை இலங்கை ராணுவம் நீக்கியது, மேலும், நிபந்தனையற்ற மன்னிப்பும்கேட்டது. இருப்பினும், இலங்கை தூதரை அழைத்து மத்திய அரசு கண்டிக்கவேண்டும் என்று நாடாளுமன்றத்தில் அதிமுக தொடர்ந்து அமளியில் ஈடுபட்டது.
இந்நிலையில், இந்தியாவுக்கான இலங்கைதூதரான சுதர்சன் சினவர்த் தனேவை வெளியுறவு அமைச்சகம் நேற்றுமுன்தினம் நேரில் அழைத்து, கண்டனம் தெரிவித்தது. இதைத்தொடர்ந்து, தனது நாட்டு ராணுவத்தின் செயலுக்காக இலங்கை அதிபர் ராஜபக்சேவும் நேற்று வருத்தம் தெரிவித்தார். ”நடந்த சம்பவத் துக்காக மிகவும் வருந்துகிறேன். இச்சம்பவம் பற்றி அறிக்கை அளிக்கும் படி ராணுவத்துக்கு உத்தரவிட்டு இருக்கிறேன்” என்று அவர் கூறினார்.
மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ... |
கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ... |
நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.