வேதங்களில் பசுக்களை யாகத்தில் ஆகுதியாக்கியதாக சொல்லப் படுகிறது. வேதங்களில் பசுவதை அங்கீகரிக்கப் பட்டுள்ளதா ? இது குறித்து ஸ்ரீ சைதன்ய மகாபிரபு வின் விளக்கம் சைதன்ய சரித்த்ராம்ருதா என்னும் அவரின் வாழ்க்கை வரலாற்று நூலில் ஆதிலீலா அத்தியாயம் 17 வரிகள் 159-165 இல் அவர் மொழியாகக் கொடுக்கப்பட்டுள்ளது வருமாறு.
” வேதங்கள் பசுக்கள் கொள்ளப்படக் கூடாது என்று தெளிவாகவே கட்டளை இடுகின்றன. எனவே எந்த இந்துவும் தன்னை பசுவதையில் ஈடுபடுத்திக் கொள்ளக் கூடாது. வேதங்களிலும் புராணங்களிலும் சில அனுமதிகள் சொல்லப்பட்டுள்ளன.அதாவது ஒருவர் ஒரு உயிரை புதுப்பிக்க முடியும் என்றால் மாத்திரம் (வேதங்களில் கூறப்பட்டுள்ள யாகங்கள் மூலம்)அவர்கள் அந்த உயிரை பரிசோதனைக்காக கொள்ளலாம்.(அதாவது அவர்களுக்கு அதை மீள உயிர்ப்பிக்கும் ஆற்றல் இருக்க வேண்டும்.) இதனால் பெரிய பெரிய ஞானிகள்,முனிவர்கள் சில நேரங்களில் வயதான விலங்குகளைக் கொன்று பின்னர் வேத உச்சாடனங்கள் மூலம் அவற்றை மீள உயிர்ப்பித்தனர்.
இவ்வாறு அவற்றை கொன்று மீண்டும் அவற்றுக்கு இளமையுடன் உயிர் கொடுப்பது உண்மையில் கொள்ளுதல் ஆகாது.அவை அவ்வுயிர்களுக்கு நன்மை பயப்பதே.முற்காலத்தில் இவ்வாறு செய்யக்கூடிய தவ ஆற்றல் மிகுந்த முனிவர்களும் பிராமணர்களும் இருந்தார்கள்.அவர்கள் வேத மந்திரங்களை வைத்து இப்பரிசோதனைகளை மேட்கொண்டார்கள்.ஆனால் இப்போது கலியுகத்தில் பிராமணர்கள் அந்த அளவு ஆற்றல் வாய்ந்தவர்கள் அல்ல.அதனால் பசுக்களை கொன்று மீண்டும் புத்துயிர் அளிக்கும் பர்சொதனைகள் தடை செய்யப்பட்டுள்ளன.இக்கலியுகத்தில் ஐந்து முக்கிய விடயங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.
1.யாகத்தில் குதிரைகளை ஆகுதியாக்குவது,2.யாகத்தில் பசுக்களை ஆகுதிஆக்குவது 3.துறவறத்தை ஏற்றுக்கொள்வது,4.பித்ருக்களுக்கு இறைச்சி வகைகளை அர்ப்பணம் செய்து வணங்குவது 5.ஒரு மனிதன் தன சகோதரனின் மனைவிக்கு குழந்தை கொடுப்பது (இது மகாபாரதத்தில் நடந்தது ) இவை தடை செய்யப்பட்டவை.
இவ்வாறு சைதன்ய மகாப்ரபு கூறியதாக அவர் சரித்திர நூலில் கூறப்பட்டுள்ளது. இதை மேற்கோள் காட்டி எழுதப்பட்ட Stephen Knapp என்னும் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்கத்தைச் சேர்ந்தவர் எழுதிய The secret teachings of Vedas என்னும் நூலில் எலுதப்பட்டுள்ளதையே இங்கு நான் பதிவிடுகிறேன்.
இதுவரை பசுக்கள் கொல்லப்பட்டதா வேதங்களில் என்னும் கேள்விக்கு எங்கு தேடியும் திருப்தியான பதில் கிடைக்கவில்லை. இதைத்தவிர. இதுவே ஓரளவு வெளிச்சம் காட்டுகிறது. சைதன்ய மகாபிரபு வின் வார்த்தைகளை சந்தேகிக்க முடியாது எனினும் இதை ஏற்றுக் கொள்ளலாமா என்று அறிந்தவர்கள் தான் சொல்ல வேண்டும்.
ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் ... |
சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.