தமிழநாட்டில் , தி.மு.க., – காங்., ஊழல் கூட்டணியை தோற்கடிக்க, எந்த கட்சிகளுடனும் கூட்டணி அமைக்க பாரதிய ஜனதா தயாராக உள்ளது,” என, மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை மற்றும் ஓசூரில் பாரதிய ஜனதா கட்சி சட்டசபை தொகுதி தேர்தல் ஆலோசனை
கூட்டம், மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்தது.கூட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆறு சட்டசபை தொகுதிகளிலும் போட்டியிடுவது எனவும், தொகுதி வாரியாக மூன்று ஊராட்சிகளை ஒருங்கிணைத்து, தேர்தல் கமிட்டி அமைத்து, தேர்தல் பணி மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது.
மத்தியிலும், மாநிலத்திலும் உள்ள தி.மு.க., – காங்., ஊழல் கூட்டணியை தோற்கடிக்க எந்த கட்சிகளுடன் கூட்டணி அமைக்க தயாராக உள்ளோம். “2ஜி’ முடிந்து தற்போது “4ஜி’ ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், 2 லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. பணபலம் மற்றும் அதிகாரம் பலமிக்க ஊழல் கூட்டணியை, நாட்டை விட்டு விரட்டுவதற்கு மக்கள் முடிவு செய்து விட்டனர். மக்களை ஒருங்கிணைக்க எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும்.இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் பேசினார்.
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ... |
மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது. |
பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.