பிரதமர் பங்கேற்கும் விருந்து களில், அசைவ உணவுகளை பரிமாறக்கூடாது. அதேபோல், ஒயின் பரிமாறுவதையும் தவிர்க்கவேண்டும் என, பிரதமர் அலுவலகம் அறிவுறுத்தி உள்ளது.
பிரதமர் அலுவலகம் சார்பில், அனைத்து அமைச்சகங்கள், உயர் அலுவலகங்கள், வெளி நாடுகளில் உள்ள இந்திய துாதரக அலுவலகங்கள் ஆகியவற்றுக்கு, ஒருகுறிப்பு அனுப்பப்பட்டு உள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:எந்த காரணத்தாலும், பிரதமர் பங்கேற்கும் விருந்துகளில், அசைவ உணவுகளை பரிமாறக்கூடாது. அதேபோல், ஒயின் பரிமாறுவதையும் தவிர்க்கவேண்டும்.பிரதமர், வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்யும் போது, ஏதாவது விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டால், இந்த உத்தரவை செயல்படுத்த வேண்டியது, அங்குள்ள இந்திய துாதரகங்களின் கடமை.
அதே நேரத்தில், உணவு விஷயத்தில் தனிமனித சுதந்திரத்துக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை . பிரதமர் பங்கேற்காத அரசு விருந்துகளில், அசைவ உணவு பரிமாறுவதற்கு, எந்தகட்டுப்பாடும் இல்லை.இவ்வாறு, அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
'ஏர் – இந்தியா' விமான நிறுவனத்துக்கும், பிரதமர் அலுவலகம் சார்பில் ஒருகுறிப்பு அனுப்பப்பட்டுள்ளது. அதில், 'பிரதமரின் பயணத்தின் போது, விஸ்கி, ஒயின் உள்ளிட்ட மதுபானங்களை சப்ளைசெய்வதை தவிர்க்க வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ... |
வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ... |
பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.