பாஜக.,வை எதிர்க்க, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின், திரிணமுல் காங்கிரசுடன் கூட்டணி அமைப்பது என்ற பேச்சுக்கே இடம் இ்ல்லை' என்று இடதுசாரிகள் தெரிவித்துள்ளன.
கோல்கட்டாவில், சமீபத்தில் தொலைக் காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த, மம்தாபானர்ஜி கூறியதாவது: பீகாரில், சமீபத்தில் நடைபெற்ற இடைத் தேர்தலில், ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் லாலுவும், ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமாரும், காங்கிரஸ் கட்சியும் அணிசேர்ந்து உள்ளன. பா.ஜ.,வுக்கு எதிராக அமைக்கப்பட்ட இந்தகூட்டணி, இடைத் தேர்தலில் வெற்றியும் பெற்றுள்ளது. அதேபோல், மேற்கு வங்கத்தில், பா.ஜ., பலம்பெறும் சூழ்நிலை உருவானால், எங்கள் கட்சியின் நீண்டநாள் எதிரிகளான, இடதுசாரிகளுடன் கூட்டணி அமைப்பது குறித்தும் பரிசீலிப்போம் இவ்வாறு, மம்தா பானர்ஜி கூறினார்.
இதற்குப் பதில் அளிக்கும்வகையில், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா கூறுகையில், ''திரிணமுல் காங்கிரஸ்சுடன், கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை. மம்தாவின் கொள்கைகள் மற்றும் அரசியலால்தான், மேற்குவங்கத்தில், பாஜக., கால் பதிக்கத் துவங்கியுள்ளது. பா.ஜ.க,வை, நாங்களே தனியாகவே எதிர்ப்போம்,'' என்றார்.
பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ... |
சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ... |
காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.