இந்திய வெளியுறவு கொள்கையில் ஜப்பானுக்கு முன்னுரிமை தரப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திரமோடி 5 நாள் சுற்றுப் பயணமாக ஜப்பான் நாட்டுக்கு சென்றுள்ளார். முதல் 2 நாட்கள் அவர் ஜப்பானின் பழைய தலை நகரான கியோட்டோவில் தங்கினார். முதல் நாளில், வாரணாசி நகரை ஜப்பானில் உள்ள கியோட்டோ நகரைப்போன்று மாற்றும் வகையில், நவீன நகராக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் ஷின்ஜோஅபே ஆகியோர் முன்னிலையில் கையெழுத் தானது. 2–வது நாளான நேற்று மோடி, கியோட்டோ நகரில் 8–ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட டோஜி புத்தகோவிலுக்கு சென்றார்.
ஜப்பான் பயணத்தில் 3–ம் நாளான திங்கட்கிழமை டோக்கியோவில், ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபேவை மோடி சந்தித்துபேசினார். அப்போது, பாதுகாப்பு, உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் பொருளாதார துறைகளில் இருநாடுகளும் இணைந்து செயல்படுவது குறித்த பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்தியாவில் சுமார் ரூ 2 லட்ச கோடி முதலீடுசெய்ய ஜப்பான் திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் நவீன நகரங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்புப் பணிகளுக்கு ஜப்பான் முதலீடு செய்யவுள்ளது. வரும் 5 வருடங்களில் ரூ 2.01,480 கோடி முதலீடுசெய்ய ஜப்பான் முடிவுசெய்துள்ளது.
இந்தியாவில் அதிவேக ஷின்கான் சென் ரெயில் முறையை அறிமுகம் செய்ய நிதி, தொழில் நுடபம் மற்றும் செயல்பாட்டு ஆதரவு அளிக்கப்படும் என்று ஜப்பான் தெரிவித்துள்ளது. ஜப்பான் மற்றும் இந்தியாவில் படிப்புக்குசெல்லும் மாணவர்கள் எண்ணிக்கையை இரு நாடுகளும், கணிசமாக உயர்த்த உள்ளது. இந்தியாவில் ஜப்பனீஸ் மொழிகல்வி மேம்படுத்தப்படும். உலகளவில் பயங்கரவாதிகளின் பாதுகாப்பான புகலிடங்களை அழிக்க இந்திய-ஜப்பான் உறுதி ஏற்றுள்ளது. என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியா-ஜப்பான் பேச்சுவார்த்தையை அடுத்து இந்த அறிவிப்புகளை ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே வெளியிட்டுள்ளார்.
இருநாட்டு தலைவர்கள் சந்திப்பை அடுத்து, ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே மற்றும் பிரதமர் நரேந்திரமோடி கூட்டாக பேசினர். அப்போது ஜப்பான் பிரதமர் அபே பேசுகையில், இந்திய பிரதமர் மோடி என்னுடைய நீண்ட நாள் நண்பர். இந்தியாவுடன் உறவுகளை புதுப் பிப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம் . முதல் இருதரப்பு கூட்டமாக இந்திய பிரதமர் நரேந்திரமோடி முதலில் ஜப்பானை தேர்வுசெய்துள்ளார். இந்தியாவுடனான எங்களது நல்லுறவை மேலும் வலுப்படுத்த நாங்கள் விரும்புகிறோம். புல்லட்ரெயில் உள்பட உள்கட்டமைப்பு வளர்ச்சிகளை மேம்படுத்தும் திட்டங்களுக்கு இந்தியாவிக்கு ஒத்துழைப்பு தர உடன்பாடு ஏற்பட்டுள்ளது. என கூறினார்.
பின்னர் பிரதமர் நரேந்திரமோடி பேசுகையில், இந்தியாவின் வெளியுறவு கொள்கையில் ஜப்பானுக்கு முன்னுரிமை கொடுப்போம் என்று கூறியுள்ளார். அவர் பேசுகையில், என்னுடைய அரசு பதவி ஏற்று 100வது நாளை எட்டியுள்ள நிலையில் ஜப்பானுக்கு பயணம் மேற்கொள்ளும், வாய்ப்பு கிடைத்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளேன். கடந்த பல ஆண்டுகளாக இந்தியா – ஜப்பான் உறவு மேலும் வலுப் பெற்றுள்ளது. இந்தியாவின் உள்ளடங்கிய வளர்ச்சியில் ஜப்பான் முக்கியபங்காற்றும். இந்தியாவின் நெருங்கிய கூட்டாளி ஜப்பான். இந்தியாவின் வெளியுறவு கொள்கையில் ஜப்பானுக்கு முன்னுரிமை கொடுப்போம். இந்தியாவில் ரூ 2.10 லட்சம் கோடி முதலீடுசெய்ய ஜப்பான் முன்வந்துள்ளதை வரைவேற்கிறேன். என்று கூறியுள்ளார்.
நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ... |
ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ... |
கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.