வேட்பு மனு தாக்கல் செய்ய அனுமதி மறுப்பு நீதிமன்றம் செல்லவும் கட்சி தயங்காது

 பாஜக. வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய சென்ற போது அனுமதி மறுக்கப்பட்டதாகவும், இது குறித்து நீதிமன்றம் செல்லவும் கட்சி தயங்காது என்றும் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் எச்சரித்துள்ளார். .

இதுகுறித்து, பாஜக. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக பாரதீய ஜனதா கட்சி, வரும் உள்ளாட்சி இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டும் என முடிவுசெய்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆதரவை பெற்று பட்டியல் தயார்செய்து அவர்கள் எல்லாம் இன்று வேட்புமனு தாக்கல்செய்தனர். ஏற்கனவே, தேர்தல் காலம் குறுகிய அவகாசத்தில் அறிவிக்கப்பட்டதால் அத்தனை எதிர்கட்சிகளும் ஒதுங்கி நிற்க பாரதீய ஜனதா கட்சி போட்டியிட முடிவுசெய்தது.

அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் குறுகிய காலத்திற்குள் எல்லாம் தயார்செய்து வேட்புமனு தாக்கல்செய்ய சென்றனர். பல இடங்களில் அராஜகம் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. வேட்பு மனுவை தாக்கல் செய்யவிடாமல் தடுத்தது மட்டுமல்லாமல் பாஜக வேட்பாளர்கள் தாக்கப்பட்டும் இருக்கிறார்கள். புதுக்கோட்டை நகர்மன்ற தலைவர் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல்செய்ய சென்ற எங்களது வேட்பாளர் பழ.செல்வம் பலமணி நேரம் அலுவலகத்தில் காத்திருந்தும் கதவுகள் பூட்டப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார்.

நீதி கேட்டு சாலைமறியல் செய்த தொண்டர்களையும், அவரையும் தாக்கியது மட்டுமல்லாமல் கைதும் செய்திருக்கிறார்கள். ஆயிரக் கணக்கானோர் அவ்வளாகத்தில் வந்து வன் முறையில் ஈடுபட்டனர் என்ற செய்தியும் வந்திருக்கிறது. அதேபோல விழுப்புரம் மாவட்டம் வானூர் ஒன்றியத்திலும், மயிலம் ஒன்றியத்திலும் ஒன்றிய மற்றும் மாவட்ட கவுன்சிலர்கள் தேர்தலுக்கான வேட்புமனு வாங்குவது மறுக்கப்பட்டிருக்கிறது.

காலையில் இருந்தே வேட்பாளர்கள் காத்து கொண்டிருக்கின்றனர். அங்கேயும் அராஜகம் தலைவரித்தாடி யிருக்கிறது. நீதிகேட்டு சாலைமறியல் செய்த பாஜக தொண்டர்கள் மற்றும் வேட்பாளர்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஜனநாயகம் என்பது ஆரம்பத்திலேயே மறுக்கப்பட்டிருக்கிறது. வேட்புமனுகூட தாக்கல் செய்யமுடியாத நிலை நிலவுகிறது. தமிழகத்தில் என்பதை தமிழக தேர்தல் ஆணையம் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். மறுக்கப்பட்ட இடங்களில் மறுதேதி குறிப்பிட்டு வேட்பு மனுக்கள் வாங்கப்பட வேண்டும்.

தமிழக அரசும், காவல் துறையும் இந்ததேர்தலில் இதுபோன்ற அராஜகங்கள் இனிமேல் நடக்காமல் தடுக்கவும் அராஜகத்தில் ஈடுபட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கவும் ஆவண செய்யவேண்டும். வேட்புமனு வாங்க மறுத்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும். இவையெல்லாம் நடக்கவில்லை என்றால் பாஜக போராட்டம் நடத்துவதற்கும், நீதிமன்றம் செல்வதற்கும் தயங்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆண்மையை அதிகமாக்கும் வழிகள்

அரைக்கீரை 100 கிராம் –மிளகு 10 கிராம், கொத்தமல்லி இலை 50 கிராம், ...

மனதை ஒருமைப்படுத்துதல்

தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ...

தியானமும் தற்சோதனையும்

தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ...