ஒவ்வொரு கடவுளருக்கும் ஒவ்வொரு விசேஷ துதிகள் உள்ளன!! காலப்போக்கில் அவையே மிக அதிகமான மக்களால் கடைப்பிடிக்கப்படுவதாகவும் உள்ளன!! அப்படி உள்ளவற்றில் வேதங்களில் உள்ள துதிகளில் இந்தப் பதிவுத் தொடரின் கருத்துக்கு உதவும் வகையிலான சில ஸ்துதிகளை பற்றிக் கூற விழைகிறேன்!!
உதாரணமாக விஷ்ணு ஸ்துதிகளில் மிக அதிகமான பக்தர்களால் சொல்லப்படுவதாக விஷ்ணு சகஸ்ரநாமம் உள்ளது!! அதே போல சிவபெருமானுக்கும் சகஸ்ரநாமமும் ஏன் தசசகஸ்ரநாமமும் கூட உள்ளன!! ஆனால் பெரும்பான்மையான பக்தர்களால் கடைப்பிடிக்கப்படுவது புகழ் பெற்ற ஸ்ரீ ருத்ரம் ஆகும்!! கிருஷ்ண யஜுர் வேதத்தின் தைத்த்ரீய சாகையில் ருத்ரம் வருகிறது!! ருத்ரத்தை தினமும் ஓதுவதாலோ அல்லது ஓதக் கேட்பதாலோ வாழ்க்கையில் மங்களங்கள் பல உண்டாகும்!! நோய் நொடிகள் அகன்று போகும்!! மன அமைதி கிட்டும் !! ஞானத் தேடல் வாய்க்கும் !! இப்படிப் பல சிறப்புகளைப் பெற்றுள்ள ருத்ரம் அனுவாகம் என்று சொல்லப்படும் பதினோரு பிரிவுகளைக் கொண்டுள்ளது!! அவை கூறும் பொருள் பற்றி சுருக்கமாக சில பதிவுகளில் விளக்குகிறேன்!!
முதல் அனுவாகம் : மலையிலிருந்து அருளைப் பொழியும் ருத்ரனே !! உன் கைவில்லுக்கும், அம்புகளுக்கும், அம்பறாத் துணிக்கும் எங்கள் வணக்கங்கள்!! நீலநிறத்தில் தொண்டையை உடைய இறைவனே எப்போதும் நன்மையையே செய்பவனே எங்கள் மேல் சந்தோஷத்தைப் பொழிவாயாக!!! உன் அமைதியான பார்வை எங்களை மோட்சப் பாதையில் இட்டுச் செல்லும்!!அதன் மூலம் நாங்கள் ஆன்மாவைப் பற்றி உணர்வோம்!! உன் வில் அம்புகளின் மூலம் தவறு செய்பவர்களை மட்டுமே தண்டித்து நன்மக்கள் மேல் அதை பிரயோகிக்காமல் இருப்பாயாக!!! எல்லாவற்றிலும் முதல்வனாக இருப்பவனே உனக்கு எங்கள் வணக்கங்கள்!!!!
இரண்டாம் அனுவாகம் :பிரபஞ்சத்தின் கடவுளே, கடவுளரில் உயர்ந்தவரே, முக்கண் கொண்டவரே, முப்புரம் எரித்தவரே,உலகை எரிப்பவரே, மரணத்தின் கடவுளையும் வென்றவரே, எல்லாவற்றுக்கும் கடவுளே, எப்போதும் அமைதியானவரே,மரம் போல மின்னுபவரே, பசுமை போல விரிந்த சடையைக் கொண்டவரே, எதிரிகளுக்கு நோயைக்கொடுப்பவரே, எல்லா உணவுகளுக்கும் கடவுளே, பிறவித்தளை என்கிற மரத்தைத் தகர்ப்பவரே, அனைவரையும் காப்பவரே உனக்கு எங்கள் வணக்கங்கள்!!!
மூன்றாம் அனுவாகம் : (இதன் பொருளை அப்படியே எடுத்துக் கொண்டால் சிக்கல்தான்!! இது மறைவான வேறு விஷயங்களைக் குறிப்பது ஆகும்!) வாளைக் கொண்டவனே, எதிரிகளை வாளால் அடிப்பவனே, திருடர்களில் தலைவனே, அம்பறாத் துணியில் விற்களையும் அம்பெய்யத் தயாரான வில்லையும் உடையவனே, கொள்ளைக் கூட்டத்தின் தலைவனே, எமாற்றுபவனே, ஏமாற்றித் திருடுபவர்களில் தலையாயவனே, உள்ளே திருடுபவனே, வெளியில் திருடுபவனே , காடுகளில் திருடுபவர்களில் தலையாயவனே, அடுத்தவர்களை தண்டிப்பவனே, இரவுகளில் திருடுபவனே, கொன்று திருடுபவர்களில் தலையாயவனே, வீடுகளிலும் நிலங்களிலும் திருடுபவர்களில் தலையாயவனே, குறி மீது அம்பை எய்பவனே, அம்பினால் குறியைத் துளைப்பவனே, உறங்குபவனே, விழித்திருப்பவனே, நிற்பவனே, ஓடிக் கொண்டேயிருப்பவனே, கூட்டத்தில் ஒருவனாக இருப்பவனே, கூட்டத்தின் தலைவனாக இருப்பவனே , குதிரையாக இருபவனே குதிரை ஓட்டுபவனாக இருப்பவனே உனக்கு எங்களுடைய வணக்கங்கள் !!
இங்கு திருடன், கொள்ளைக்காரன், கொன்று திருடுபவன், மிகச் சிறந்த திருடன் என்பதெல்லாம் நம்மிடம் உள்ள அறியாமையை நாமறியாமல் திருடிச் சென்று நமக்கெல்லாம் ஞானம் அளிப்பவனே என்றே பொருள் கொள்ள வேண்டும்!! அதே போல மாறுபட்ட இரு விஷயங்களையும் அதாவது இரண்டு முனைகளிலும் செயல்படும் கடவுள் என்று கொள்ள வேண்டும்!! உதாரணமாக மாயையைத் தருபவன்!! அது நமக்குள் அறியாமையைத் தருகிறது!! ஆனால் நமக்கு இறைத் தேடல் வாய்க்கும்போது அவன் அந்த அறியாமையை நாமே அறியாவண்ணம் நம்மிடமிருந்து கவர்ந்து செல்கிறான் என்பதையே இது குறிக்கிறது!! இதனால்தான் சொல்கிறேன் தமோகுணக் கடவுள் என்பதன் பொருள் அவர் குறித்ததல்ல தமோகுணத்தை நமக்கு அளித்து அதை நம்மிடம் இருந்து எடுப்பதும் அவரே என்று!!
தொடரும்,,,,,,
நன்றி #TREASURES_OF_HINDUISM
#Dhrona_charya
நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ... |
ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ... |
Leave a Reply
You must be logged in to post a comment.