அமெரிக்க அதிபர் ஒபாமாவை இந்திய பிரதமர் வரும் 29, 30 ஆகிய இருநாட்கள் சந்தித்துப் பேசவுள்ளார்.
இது குறித்து அமெரிக்க அதிபர் மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜோஷ் எர்னெஸ்ட் கூறும் போது, "செப்டம்பர் 29 மற்றும் 30ம் தேதிகளில் இந்தியபிரதமர் மோடியை சந்தித்துப்பேச அமெரிக்க அதிபர் ஒபாமா ஆர்வமாக உள்ளார்.
இருநாடுகளின் குடிமக்களின் நலனை கருத்தில் கொண்டு , பல்வேறுதுறைகளில் இருதரப்பும் கூட்டாளிகளாக செயல்படுவதற்கான வழிவகைகள் குறித்து இருவரும் பேச்சு நடத்துவார்கள்.
அமெரிக்க அதிபர் ஒபாமாவை இந்திய பிரதமர் நரேந்திரமோடி வரும் 29, 30 உள்ளிட்ட இரு நாட்கள் சந்தித்துப் பேசவுள்ளார்கள், ஆப்கானிஸ்தான், சிரியா, இராக் நாடுகளின் அரசியல்நிலவரம் குறித்து இருவரும் விவாதிப்பார்கள்" என்றார்
அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் கெய்த்லின் ஹேடன் கூறும்போது, "இரு தலைவர்களின் சந்திப்பு குறித்த முழுவிவரங்களை 2 வாரங்களுக்குப் பிறகு வெளியிடவுள்ளோம். இருவரும் செப்டம்பர் 29, 30 ஆகிய இருநாட்கள் சந்தித்துப்பேச ஏற்பாடு செய்துள்ளதன் மூலம் இருநாடுகளின் இடையேயான உறவை மேம்படுத்த நாங்கள் அளித்துவரும் முக்கியத்துவத்தை நீங்கள் புரிந்துகொள்ளலாம்" என்றார்.
உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ... |
முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ... |
கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.