தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலை ரத்துசெய்ய வேண்டும், அதையும் மீறி தேர்தல் நடைபெற்றால் ஜனநாயகம் காக்க பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் பாஜகவை ஆதரிக்க வேண்டும் என்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்
கோவை பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அவர் அளித்த பேட்டி:
கோவை நகரமக்கள் மீது மாநகராட்சி மேயர் இடைத் தேர்தல் திணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலை சவாலாக ஏற்றுக்கொண்டு தேர்தலில் பாஜக போட்டியிடுகிறது.
உள்ளாட்சி தேர்தலில் எதிர்க் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களை வேட்புமனு தாக்கல் செய்யவிடாமல் காவல்துறை உதவியுடன் ஆளும் கட்சியினர் தடுத்துள்ளனர்.
அதையும்மீறி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், போலிக் காரணங்களை கூறி நிராகரிக்கப்பட்டன. மேலும், மனு ஏற்கப்பட்ட வேட்பாளர்களை அதை திரும்பப்பெறுமாறு மிரட்டியுள்ளனர். உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பகுதிகளில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுகிறது.
இதனால், தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை ரத்துசெய்ய வேண்டும். அதையும்மீறி தேர்தல் நடைபெற்றால் ஜனநாயகம் காக்க பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் பாஜகவை ஆதரிக்க வேண்டும்.
தமிழக மீனவர்கள் பிரச்னையில் நிரந்தரத்தீர்வு காண பிரதமர் மோடியும், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
கச்சத்தீவை மீட்பதன் மூலமாக தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வுகாண முடியும் என்ற நம்பிக்கை இல்லை. கடல் எல்லை தொடர்பாகவே இருநாட்டு மீனவர்களுக்கு இடையே பிரச்னை நிலவி வருகிறது என்றார்.
சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ... |
வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ... |
அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ... |
Leave a Reply
You must be logged in to post a comment.