அமெரிக்க சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு, நியூயார்க்கில் உற்சாகமான வரவேற்பு தரப்பட்டது .
.பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் பிரதமர் நரேந்திரமோடியின் அமெரிக்க சுற்றுப் பயணம் துவங்கியுள்ளது. குஜராத் கலவரத்தை தொடர்ந்து, விசாமறுக்கப்பட்ட நிலையில், சமீபத்தில் நடந்த லோக் சபா தேர்தலில் மாபெரும் வெற்றிபெற்று, இந்தியாவின் பிரதமர் என்ற முறையில் நரேந்திர மோடி அமெரிக்கா செல்கிறார். நியூயார்க் நகரில் உள்ள ஐநா., பொது சபையின் வருடாந்திர கூட்டத்தில் உரையாற்றுவதற்காக செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, தனது சுற்றுப் பயணத்தில் 100 மணி நேரத்தில் 50க்கும் மேற்பட்ட முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடியின் இந்த சுற்றுப் பயணம் வளர்ச்சியை முன்னெடுத்து செல்லும் சுற்றுப் பயணமாக கருதப்படுகிறது. அவரது இந்த சுற்றுப் பயணம் இந்தியாவுக்கு அதிக முதலீடுகளை ஈர்க்கவும், இரு நாடுகளுக்கும் தடையாக உள்ள விவகாரங்களுக்கு சுமுகதீர்வு ஏற்படவும் உதவும் என்று நம்பப்படுகிறது.
தனது அமெரிக்க சுற்றுப் பயணத்திற்காக டில்லியிலிருந்து ஏர் இந்தியா ஒன்விமானத்தில் செப்டம்பர் 25ம் தேதி மாலை பிரதமர் கிளம்பினார். அமெரிக்கா செல்லும்வழியில் அவரது விமானம் ஜெர்மனியின் பிராங்க் பர்ட் நகரம் சென்றடைந்தது. அங்கு சிறிதுநேரம் ஓய்வெடுத்துக் கொண்ட பின், அங்கிருந்து கிளம்பிய பிரதமர் நியூயார்க் நகரில் உள்ள ஜான் எப்கென்னடி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்திறங்கினார்.
அங்கு அவரை அமெரிக்காவுக்கான இந்திய தூதர் ஜெய் சங்கர், மற்றும் அமெரிக்க அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் பிரதமர் மோடி நியூயார்க் பேலஸ் ஓட்டலுக்கு சென்றார். மன் ஹாட்டன் பகுதியில் அமைந்துள்ள அந்த ஓட்டல்முன்பாக, ஏராளமான இந்தியர்கள் குவிந்திருந்தனர். அவர்களைப் பார்த்ததும் உற்சாகமடைந்த பிரதமர் மோடி, அவர்களை நோக்கி கையசைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ... |
நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ... |
ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.