ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அமெரிக்கா ஆதரவு

 ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிப்பதற்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது. வாஷிங்டனில் அமெரிக்க அதிபர் ஒபாமா – பிரதமர் நரேந்திரமோடி இடையே நடைபெற்ற சந்திப்புக்குப் பிறகு, இரு நாடுகளின் சார்பில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளை மாளிகையில் ஒபாமாவும், நரேந்திர மோடியும் அதிகாரப் பூர்வமாகப் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பு சுமார் 2 மணிநேரம் வரை நீடித்தது. இந்தச் சந்திப்பின்போது பாதுகாப்பு, எரிசக்தி, பொருளாதாரம், விண்வெளி, பயங்கரவாதம், ஆப்கானிஸ்தான், எபோலா நோய் விவகாரம் உள்ளிட்டவை குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். அப்போது இரு நாடுகளிடையேயான உறவை புதியகட்டத்துக்கு எடுத்துச் செல்வதென்று முடிவுசெய்தனர்.

அதைத்தொடர்ந்து, இந்தியா-அமெரிக்கா நாடுகளின் சார்பில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இணைந்து செயல் படுவதென இருநாடுகளும் முடிவு செய்துள்ளன. பயங்கரவாதிகள் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுக்களின் புகலிடங்களை அழிக்க உறுதியான, கூட்டு நடவடிக்கை எடுக்கவேண்டிய அவசியத்தை இரு நாடுகளும் உணர்ந்துள்ளன. இதில், அல்-காய்தா, லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகம்மது பயங்கரவாதக் குழுக்களுக்கும், தாவூத் இப்ராஹிம், ஹக்கானி குழுவினருக்கும் எவ்வித நிதியுதவியும் கிடைக்க விடாமல் தடுக்க நடவடிக்கை எடுப்பதும் அடங்கும்.

மும்பையில் கடந்த 2008ஆம் ஆண்டு நடைபெற்ற தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இரு நாடுகளும் மீண்டும் வலியுறுத்துகின்றன.

உலக அளவில் ஆயுதப் பரவலை தடுப்பதிலும், ஆயுத ஏற்றுமதியைக் கட்டுப்படுத்துவதிலும் ஒத்துழைப்பை அதிகரிக்க இரு நாடுகளும் திட்டமிட்டுள்ளன. அணுசக்தி விநியோகஸ்தர்கள் குழு (என்எஸ்ஜி), ஏவுகணைத் தொழில்நுட்பக் கட்டுப்பாடு அமைப்பு(எம்.டி.சி.ஆர்), தி வாஸ்ùஸனர் ஏற்பாடு, தி ஆஸ்திரேலியன் குழு ஆகியவற்றில் இந்தியா உறுப்பினராகச் சேர்வதற்கு 2 நாடுகளின் தலைவர்களும் தொடர்ந்து பணியாற்ற உறுதி பூண்டுள்ளனர். இந்த 4 அமைப்புகளிலும் இந்தியா விரைவில் உறுப்பினராவதற்கு அமெரிக்க அதிபர் ஒபாமா தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

கடல் பகுதியில் அனைத்து நாடுகளும் தங்களது கப்பல்களை சுதந்திரமாக இயக்குவது உறுதிசெய்யப்பட வேண்டும். குறிப்பாக, தென்சீனக் கடல் பகுதியில் இது உறுதிசெய்யப்பட வேண்டும். அந்தப் பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளும் தங்களது சுய லாபத்துக்காக பிற நாடுகளுக்கு மிரட்டல்கள் விடுப்பதையும், படைபலத்தைப் பயன் படுத்துவதையும் தவிர்க்க வேண்டும்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சீரமைக்கப்படும்போது, அதில் இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கிறது. இருநாடுகளுக்கும் இடையே பல்வேறு துறைகளில் ஏற்கெனவே நிலவும் ஒத்துழைப்புக்கு புத்துயிர் அளிக்கவும், இருநாடுகளும் இணைந்து செயல்பட புதிய துறைகளைக் கண்டறியவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியா-அமெரிக்கா இடையேயான வர்த்தகம், 2001ஆம் ஆண்டிலிருந்து 5 மடங்கு அதிகரித்து, 10,000 கோடி டாலர்களாக (சுமார் ரூ.6 லட்சம் கோடி) உள்ளது. இதனை 50,000 கோடி டாலர்களாக (சுமார் ரூ.30 லட்சம் கோடி) அதிகரிக்க செய்யத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடியும், ஒபாமாவும் உறுதிபூண்டுள்ளனர்.

அஜ்மீர், விசாகப்பட்டினம், அலகாபாத் ஆகிய நகரங்களை நவீன நகரங்களாக்கும் இந்தியாவின் நடவடிக்கையில் பங்கேற்குமாறு அமெரிக்கத் தொழில் துறைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்பது உள்ளிட்ட அறிவிப்புகள் கூட்டறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

அதைத் தொடர்ந்து, ஒபாமாவுடன் இணைந்து பிரதமர் மோடி கூட்டாகப் பேட்டியளித்தார். அப்போது மோடி பேசுகையில், "இரு நாடுகளிடையே கையெழுத்தாகியுள்ள ஆக்கப் பூர்வ அணு சக்தி ஒப்பந்தத்தை முன்னெடுத்து செல்வதென்று முடிவுசெய்துள்ளோம். இந்தியாவின் எரிசக்தி தேவையை நிறைவு செய்வதற்கு, இது மிகவும் முக்கியமானதாகும்' என்றார்.

தனது அமெரிக்கப் பயணம் வெற்றிகரமாக அமைந்ததாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

அமெரிக்க சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு, அந்நாட்டிலிருந்து புதன்கிழமை அவர் புறப்பட்டார். தில்லி வரும்வழியில் அவர், ஜெர்மனியின் ஃபிராங்கபர்ட் நகருக்குச்சென்றார்.

முன்னதாக, வாஷிங்டனில் தனது அமெரிக்க சுற்றுப் பயணத்தின் கடைசி நிகழ்ச்சியாக செவ்வாய்க் கிழமை இந்திய-அமெரிக்க வர்த்தக கவுன்சில் குழுக்கூட்டத்தில் அவர் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், "அமெரிக்காவுக்கு, எனது நன்றி. எனது அமெரிக்கப்பயணம் வெற்றிகரமாக அமைந்தது' என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

மருத்துவ செய்திகள்

சோகையை வென்று வாகை சூட

உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ...

கறிவேப்பிலையின் மருத்துவக் குணம்

கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ...

குங்குமப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ...