மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியை ஆர்எஸ்எஸ், மற்றும் பாஜக.,வை சேர்ந்த முன்னணி தலைவர்கள் சந்தித்து, நாட்டில் வரலாற்று பாடப் புத்தகங்களில் காணப்படும் முரண்பாடுகள் குறித்தும், கல்விக் கட்டணங்கள் அதிகரித்து வருவது குறித்தும் விவாதித்தனர்.
புது தில்லியில் வியாழக் கிழமை நடைபெற்ற இந்த சந்திப்பில் ஆர்.எஸ்.எஸ் மூத்த தலைவர்களான கிருஷன் கோபால், சுரேஷ்சோனி, தத்தாத்ரேய ஹோஸ் போலே, பாஜக.,வைச் சேர்ந்த ராம்லால், ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தச் சந்திப்பானது, கல்வித் துறையை மேம்படுத்துவதற்காக ஆட்சிக்கும், கட்சிக்கும் இடையிலான ஒருங்கிணைப்பை உறுதிப்படுத்தும் பாஜகவின் முயற்சிகளில் ஒருபகுதியாகும்.
இச்சந்திப்பின் போது, நாட்டில் கல்விக் கட்டணங்கள் அதிகரித்து வருவதற்கு கவலை தெரிவித்தனர் , அனைவருக்கும் தரமான கல்வியை கிடைக்கச்செய்யுமாறு அமைச்சர் ஸ்மிருதி இரானியை வலியுறுத்தின.
தொடக்கக் கல்வி முதல் உயர்கல்விவரை கல்விக் கட்டணத்தை நெறிமுறைப்படுத்த மத்திய அரசு சட்டமியற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினர். நாட்டின் கல்வித் தரத்தை உயர்த்துமாறும், கல்வித் திட்டத்தில் நல்லொழுக்கப் பாடங்களைச் சேர்க்கவேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
மேலும், நாட்டில் வரலாற்றுப் பாடப்புத்தகங்கள் உள்ள சில முரண்பாடுகளைக் களைவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அவர்கள், அமைச்சர் ஸ்மிருதி இரானியைக் கேட்டுக் கொண்டனர்.
உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ... |
சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.