ஜிம்மா மசூதி இந்தியாவின் மிகப்பெரிய மசூதி, இந்திய மதச் சார்பின்மைக்கு ஒரு கௌரவ அடையாளமும் கூட. ஆனால் அதன் தலைமை மத குருவான இமாம் சையது அகமது புகாரியின் செயலோ, மனமோ என்றும் பெரியதாக இருந்ததும் இல்லை. இந்தியாவிற்கு கௌரவம் சேர்க்கும் விதமாக அமைந்ததும் இல்லை.
முகலாய மன்னர் ஷாஜகான் டெல்லியில் பிரசித்தி பெற்ற ஜிம்மா மசூதியை 1656 ம் ஆண்டு கட்டி முடித்தார். கட்டிமுடித்தது ஒருபக்கம் மகிழ்ச்சியை தந்தாலும் மறுபக்கம் ஒரு நல்ல இஸ்லாம் மத அறிஞரை தலைமை இமாமாக நியமிக்க வேண்டிய கவலையும் அவரை வாட்டியது . இதனை தொடர்ந்து உஸ்பெகிஸ்தான் (Uzbekistan) மன்னரின் பரிந்துரையின் பேரில் மத்திய ஆசியாவில் இருந்து மௌலான சையத் அப்துல் கபூர் (Maulana Syed Abdul Ghafoor) இறக்குமதி செய்யப்பட்டு முதல் இமாமாக நியமிக்கப்பட்டார். அவர் வம்ச வாரிசுகளே ஜிம்மா மசூதியன் இமாமாக இன்று வரை நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
தலைமை மத குருவான இமாம் உயிருடன் இருக்கும் போதே தனது மகன்களில் ஒருவரை தனக்கு அடுத்த வாரிசாக நியமித்து துணை இமாம் பொறுப்பை, எதிர்கால இமாம்கான பயிற்சியையும் தந்து விடுவர். இந்த வரிசையில் வந்தவர்தான் தற்போதைய 13வது இமாம் சையது அகமது புகாரி.
இவர் தனக்கு அடுத்த வாரிசாக தனது 1 9 வயது மகன் ஷபான் புகாரியை துணை இமாமாக நியமிக்க போவதாக அறிவித்து. இதற்கான விழாவை நவம்பர் மாதம் 22ம் தேதி ஜிம்மா மசூதியில் வைத்து நடத்துகிறார்.
இந்த விழாவில் பங்கேற்க வருமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி , ராகுல்காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, உத்தர பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் அவரது தந்தை முலாயம் சிங், மற்றும் வெளிநாடுகளில் இருந்து 1000ம் முக்கிய இஸ்லாமிய தலைவர்கள் உள்ளிட்ட பல விஐபி.,களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. யாரை அழைப்பது , அழைக்காமல் விடுப்பது என்பது இவர்களது தனிப்பட்ட உரிமை. ஆனால் பாகிஸ்தான் பிரதமருக்கு அழைப்பு விடுத்து, இந்திய பிரதமரை நிராகரித்து, மோடிக்கு எங்களை பிடிக்காது, இஸ்லாமியருக்கு அவர் எதையும் செய்யவில்லை. குஜராத் கலவரம் தொடர்பாக அவரை இஸ்லாமியர்கள் மன்னிக்க மாட்டார்கள், எனது இதயத்தில் அவருக்கு இடம் தர முடியாது என்று கூறி இந்திய பிரதமரை, இந்தியாவை களங்கப்படுத்தும் விதமாக நடந்து கொண்டுள்ளது உரிமையை மட்டும்மல்ல கடமையையும் மீறிய செயலேயாகும்.
கடந்த 1963 ம் ஆண்டு முதல் 2012 ம் ஆண்டு வரை பாகிஸ்தானில் நடந்த கலவரத்தில் 22000 த்துக்கும் அதிகமான ஷியா முஸ்லீம்களும் , 10000 த்துக்கும் அதிகமான பாரெல்வி (barelvi) முஸ்லீம்களும், ஆயிரக்கணக்கான குர்திஸ், இஸ்லாமிய பழங்குடியினரும், கொல்லப்பட்டுள்ளனர். ஷியா, சன்னி, குர்திஸ், இஸ்லாமிய பழங்குடியினர் என்று ஒரே மதத்துக்குள் பலப்பிரிவுகளாக பிரிந்து கலவரம் புரிவதும், ஒருவருக்குள் ஒருவர் குண்டு வைத்து கொத்து கொத்தாக மக்களை கொன்று குவிப்பதும் இங்கு வாடிக்கை. ஏன் இமாம் சையது அகமது புகாரி அழைத்திருக்கும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப் கூட இஸ்லாமியர்கள் இடையேயான இந்த மோதல்களை தூண்டிவிட்டே அரசியல் நடத்துகிறார். இப்படிப்பட்ட நாட்டைத்தான், அந்த நாட்டின் பிரதமரைத்தான் அழைத்து, இந்திய பிரதமரை தவிர்த்து, இஸ்லாமியர்களின் பாதுகாவலனாக, பாதுகாப்பான நாடக பாகிஸ்தானை கௌரவிக்க முயன்றுல்லார் இந்த புகாரி.
தினம் தினம் எல்லைத் தாண்டி அத்து மீறுவது , பயங்கர வாதிகளுக்கு பயிற்சி தந்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்வது, இந்திய வீரர்களை சுட்டு கொள்வது, அவர்களது தலையை கொய்துச் செல்வது, இந்தியாவை வீழ்த்த, இந்திய பொருளாதாரத்தை சீர்குலைக்க தங்கள் ஐ.எஸ்.ஐ., உலவு அமைப்பின் மூலம் தினம் தினம் ஏதோ ஒரு விதத்தில் முயற்ச்சி செய்வது என்று போக்கு காட்டும் பாகிஸ்தான் நாட்டுக்குத்தான் , அதன் பிரதமருக்குத்தான் தன் இதயத்தில் இடம் தந்துள்ளார் இந்த புகாரி
கடந்த 2006ம் ஆண்டு மசூதியின் சிதிலமடைந்த பகுதிகளை சீர் செய்ய இந்தியாவுக்கே தெரியாமல் சவூதி மன்னரிடம் நிதி உதவி கோரி முன்பொரு முறையும் இந்தியாவை புறக்கணித்தவர் தான் இந்த புகாரி, இந்தியாவுக்கே தெரியாமல் அவரது கஜானாவில் வரவு வைக்க முயன்ற முயற்சியை பின்னர் தெரிந்து கொண்ட இந்திய அரசு முழுச் செலவையும் ஏற்று சவுதியின் உதவியை நிராகரித்து தேசத்தின் கௌரவத்தை நிலைநிறுத்தியது.
இந்திய அரசு மசூதிக்கு வரும் ஏழை இஸ்லாமியர்கள் தங்குவதற்காக கட்டித்தந்த மிகப்பெரிய தங்கும் விடுதியை தனது சொந்த ஒய்வு விடுதியாக அபகரித்து கொண்டார் என்றால் . இவரது தம்பியோ மிகப்பெரிய கூட்ட அரங்கை அபகரித்து கொண்டார். மசூதியின் நாலாபுறமும் அமைந்துள்ள மசூதிக்கு சொந்தமான கடை வீதிகளை இவரது நான்கு சகோதரர்களும் பங்குபோட்டுக் கொண்டுள்ளனர். கடந்த முப்பது வருடங்களாக மசூதியின் வரவு செலவு கணக்குகளை ஒப்படைக்கவே இல்லை, இன்னும் பல கடைகளுக்கு மாதம் 11 ரூபாயை மட்டுமே வாடகையாக வசூலிப்பதாக கணக்கு காட்டி ஏழை இஸ்லாமியர்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் பயன் படக்கூடிய செல்வத்தை எல்லாம் கொள்ளையடித்து கொண்டிருக்கிறார். இப்படிப்பட்டவர்தான் மோடி இஸ்லாமியருக்கு எதையுமே செயயவில்லை என்று குறை கூறியுள்ளார்.
பெருவாரியான மக்களின் ஆதரவை பெற்றுத்தான் நரேந்திர மோடி பாரத பிரதமராகி உள்ளார். அவர் இந்து , முஸ்லீம் என்று பிரித்து பார்ப்பதில்லை. அவர் அனைவரையும் இந்தியர்களாகவே பாவித்து அனைத்து தரப்பினரின் வளர்ச்சியையே நோக்கமாக கொண்டு செயல்படுகிறார். . ஆனால் இந்த இமாம் புகாரியோ தன்னை ஒரு இந்தியனாகவே இன்னும் உணரவில்லை என்பதே நிதர்சனம்.
தமிழ் தாமரை VM வெங்கடேஸ்
விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ... |
இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ... |
Leave a Reply
You must be logged in to post a comment.